Actor Ajith: அஜித் இன்று தனது 53 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்தநாளின் போது அவர் நடிக்கும் படங்களின் ஏதாவது ஒரு அப்டேட் சமூக வலைதளங்களில் வெளியாகும். இதுதான் அஜித் ரசிகர்களுக்கு அவர் சார்பாக கொடுக்கப்படும் ஒரு பெரிய ட்ரீட். ஆனால் இன்று இதுவரை அவர் நடிக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வரவில்லை.
அதற்கு மாறாக அவருடைய சூப்பர் ஹிட் திரைப்படங்களான மங்காத்தா, பில்லா, தீனா போன்ற படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகியிருக்கின்றன, சமீபகாலமாக பெரிய பெரிய ஹீரோக்கள் நடித்த சூப்பர் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்து திரையரங்க உரிமையாளர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர், அந்த வகையில் இன்று அஜித் பிறந்தநாள் என்பதால் அவருடைய கெரியரில் மிகவும் முக்கியமான மூன்று திரைப்படங்களை இன்று மறுஒளிபரப்பு செய்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: படத்துலதான் உங்க சித்தாந்தமா? நிஜவாழ்க்கையில்? ‘ஜெய்பீம்’ ரியல் பார்வதியின் தற்போதைய நிலைமை
ஏற்கனவே கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்து இன்றுவரை அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் ரீரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலேயே கில்லி திரைப்படம் தான் அதிக வசூலை ஈட்டி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று பில்லா திரைப்படமும் ரிலீஸ் ஆகி இருப்பதால் திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
ஏற்கனவே அஜீத் தன்னுடைய ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்ற வரைமுறையை வைத்திருக்கிறார். தன்னுடைய கொள்கையை தான் ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர். அதாவது நான் பார்க்கும் தொழில், என்னுடைய குடும்பம், என்னுடைய பொழுதுபோக்கு இப்படியே தன் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிற மாதிரி ரசிகர்களும் உங்களுடைய தொழில் உங்களுடைய குடும்பம் என்று தான் இருக்க வேண்டும் என விரும்புபவர் அஜித்.
அதனாலயே தனக்கென இருந்த மிகப்பெரிய ரசிகர் மன்றத்தையே கலைத்தவர் அஜித். அது மட்டும் இல்லாமல் ரசிகர் என்ற வகையில் அவர்கள் செய்த அட்டகாசம், அடாவடித்தனம் எதுவும் பொறுக்க முடியாமல் ஒரு லெட்டர் பேடால் ஒரு பெரிய ரசிகர் மன்றத்தையே கலைத்தவர். அந்த நேரத்தில் அது பெரிய அளவில் பேசும் பொருளாக பார்க்கப்பட்டது. ஒரு பெரிய முன்னணி நடிகர் இப்படி ஒரு காரியத்தை இவ்வளவு தைரியமாக செய்து இருக்கிறார் என்று திரை உலக மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நோ.. நெவர்!.. செத்தாலும் அது மட்டும் நடக்கக் கூடாது!.. கறாராக இருந்து சாதித்து காட்டிய ரஜினி!..
இன்று வரை தனக்கான ரசிகர் மன்றத்தை வைக்காத ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று பில்லா படம் ரீ ரிலீஸ் ஆனதில் சென்னை காசி திரையரங்கில் அஜித் ரசிகர் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த கில்லி பட பேனரை மேலே ஏறி அதை கிழித்து தொங்க விட்டிருக்கிறார். அது பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஒரு வேளை இதுவும் அஜித்துக்கு தெரிய வந்தால் உடனே அவர் எடுக்கும் முடிவு என் படங்களை இனிமேல் ரீ ரிலீஸ் செய்ய வேண்டாம் என்பதாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இதுபோன்ற ரசிகர்களின் செயல்களால்தான் ஒரு சில நடிகர்கள் ரசிகர்களை பார்ப்பதோ அவர்களுடன் உரையாடுவதோ விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் ரசிகர்கள் அவரவர் நடிகர்களின் படங்களை திரையரங்கில் பார்ப்பது அங்கேயே கொண்டாடுவது அதை உடனே மறந்து விடுவது அதன் பிறகு தன் வாழ்க்கை ஓட்டத்தில் கவனத்தை திருப்புவது என்ற வகையில் இருந்தால்தான் அவரவர் வாழ்க்கை இன்னும் சிறப்பானதாக அமையும்.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி படத்தில் மீனா மற்றும் சிம்ரனா? ஷாக்கான படக்குழு… உண்மை என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…