Connect with us

Cinema News

விடாமுயற்சியை மறந்த அஜித் ரசிகர்கள்!.. பில்லா ரீ ரிலீஸை தியேட்டரில் சும்மா தெறிக்கவிடுறாங்களே!..

ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் மட்டுமே தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்கிற குறிக்கோளை ரசிகர்கள் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இந்த ஆண்டு வெளியான புதிய படங்கள் எதையும் ரசிகர்கள் விரும்பி பார்க்கவில்லை. தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அந்த கதிதான் என்பது. லால்ஸ் எல்லாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருப்பார் என்பதால் ரசிகர்கள் அந்த படத்தை சீண்டவில்லை.

இதையும் படிங்க: அடக்கொடுமையே!.. தனுஷ், ராஷ்மிகா மந்தனா வீடியோ லீக் ஆகிடுச்சே!.. என்ன ரெண்டு பேரும் இப்படி ஓடுறாங்க!

இந்நிலையில் தியேட்டர்களில் வெளியாகியுள்ள ரீ ரிலீஸ் படங்களை ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு சென்று கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் ரசிகர்கள் அண்ணாமலை படத்தை தியேட்டரில் பார்த்து வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் பில்லா ரீ ரிலீஸை தியேட்டரில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

சென்னை, கோயம்புத்தூர் என திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் திருவிழாக் கோலம் பூண்டது போல அஜித் ரசிகர்கள் பில்லா படத்தை மறுபடியும் தியேட்டரில் பார்த்து ஒவ்வொரு காட்சிக்கும் விசில் அடித்தும், ஸ்கிரீன் முன்பாக நின்று ஆட்டம் போட்டும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: என் படத்துல ஒரே ஒரு ஹீரோயினா?.. நோ சான்ஸ்!.. துஷாராவை தொடர்ந்து அந்த நடிகையையும் இறக்கிய தனுஷ்!..

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் முடிந்தும் இன்னும் படப்பிடிப்பே முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. மீண்டும் அஜித் எப்போது சூட்டிங் போவார் என்று தெரியவில்லை. அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் ஒன்றாம் தேதி விடாமுயற்சி வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடுத்தாண்டு மே ஒன்றாம் தேதி படம் வெளியானால் கூட சந்தோசம் தான் என்கிற நிலைக்கே போய் விட்டனர். வாலி உள்ளிட்ட படங்களும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளன.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top