ஃபேன் மேட் வேண்டாம்!. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்ப வரும்?!. விடாமுயற்சியை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்...

by சிவா |
vidaamuyarchi
X

அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி ஒன்றை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அவரின் அடுத்த திரைப்படம் வெளியாகவில்லை. துணிவு படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பின் அது டிராப் ஆனது. அதன்பின் மகிழ் திருமேனி இயக்குனர் என அறிவிக்கப்பட்டார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதோடு சரி. அதன்பின் 6 மாதம் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. ஏனெனில் படத்தின் கதையே உறுதி செய்யப்படாமல் இழுத்துக்கொண்டே போனது. ஒருபக்கம், அஜித் வழக்கம்போல் பைக்கை எடுத்துகொண்டு ஊரை சுற்ற போனார்.

ஒருவழியாக, கதை உறுதி செய்யப்பட்டு இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு துவங்கியது. ரசிகர்கள் பிரச்சனை இன்றி தூரமாக தனது படப்பிடிப்பு நடக்க வேண்டும் என ஆசைப்படும் அஜித் இந்த முறை அஜர்பைசான் நாட்டை தேர்ந்தெடுத்தார். திரிஷா, அர்ஜூன், ஆரவ் என நடிகர், நடிகைகளை புக் செய்தார்கள்.

ஆனால், படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட படக்குழு வெளியிடவில்லை. படப்பிடிப்பும் பல காரணங்களால் தடைப்பட்டது. ஒருபக்கம், லைக்கா நிறுவனமும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்க படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனவே, அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்கிற படத்தில் நடிக்க துவங்கி அப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

vidaamuyarchi

ஆனால், விடாமுயற்சி கிணற்றில் விழுந்த கல்லை போல எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அசர்பைசானில் துவங்கியது. இந்நிலையில்தான் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

அஜித் சாதாரணமாக சாலையில் நடந்து வருவது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் அஜித் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. எனவே ‘ஃபேன் மேட் போஸ்டர் வேண்டாம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்ப விடுவீங்க?’ என பலரும் கிண்டலடித்து வருகின்றனர். சிலரோ ‘எங்கே செல்லும் இந்த பாதை’ என நக்கலடித்து வருகிறார்கள்.

Next Story