Actor Ajith: இந்திய சினிமாவிலேயே ஏன் உலக சினிமாவையே எடுத்துக் கொள்வோம். அப்டே என்ன? அப்டேட் என்ன? என கேட்டு கேட்டு பட தயாரிப்பாளர்களையே ஓட வைத்தவர்கள் அஜித் ரசிகர்கள்தான். ஆனால் இதுவரைக்கும் ஒரு அப்டேட்டாவது வந்ததா? விடாமுயற்சி என்பது படத்திற்கான பேரு மட்டும் இல்லை. இதே விடாமுயற்சியுடன் கேட்டுக் கொண்டே கடைசிவரை கத்தி கொண்டே இருங்கள் என்பதை சொல்லாமல் சொல்லும் டைட்டில்தான் அது.
ஒரு அப்டேட் சொன்னால்தான் என்ன? ஒரு ரசிகனை பிடிக்க ஒவ்வொரு நடிகரும் எந்தளவுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் அஜித் ஒரே நொடியில் அசால்ட்டாக தூக்கி எறிந்தார். பாலாபிஷேகம் செய்வது, போஸ்டர் அடிப்பது, கட் அவுட் வைப்பது என இன்று வரை அஜித்தை தலையில் வைத்து கொண்டாடி வருகிறீர்கள்.
இதையும் படிங்க: டைரக்டர் சொல்லியும் கேட்கலயே!.. ஆர்வக்கோளாறில் அடம்பிடித்து விஜய் நடித்த காட்சி!. அட அந்த படமா!..
பதிலுக்கு என்ன செய்தார்? ரசிகர் மன்றமே வேண்டாம் என முகத்தில் கரியை பூசினார். ஆனாலும் ரசிகர்கள் விட்டார்களா? தொடர்ந்து தல தல தல என கூக்குரலிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். பிரெஞ்சுப் புரட்சிக்குக் கூட இப்படி கத்தியிருக்கமாட்டார்கள். இது அவர் காதுக்கு கேட்டிருக்குமா? கேட்டது. கேட்டதும் என்ன செய்தார் தெரியுமா? இனிமேல் என்னை யாரும் தல என அழைக்க வேண்டாம் என்றும் ஏகே என்று அழைத்தால் போதும் என்றுதான் கூறினார்.
அதுக்கு நம்மாளுங்க ஓகே என சொல்லி மீண்டும் தல புராணத்தைத்தான் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் செய்த உதவிகள் ஏராளமாக இருக்கலாம். இன்று வரை கூட செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர்தான் எல்லாமே என இருக்கும் ரசிகர்களுக்காக என்ன செய்தார் என்பதுதான் ஒரே கேள்வி. பல பேர் விரக்தியில் தல ரசிகர் என சொல்லிக் கொள்வதில் வருத்தமாக இருக்கிறது என வெளிப்படையாக சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இதையும் படிங்க: வாங்குறது கடுகளவு.. செய்றது உலகளவு! சல்யூட் போட வைக்கும் காமெடி நடிகர்கள் – பல்பு வாங்கும் ஹீரோக்கள்
ஒரு பெரிய கோட்டையையே கட்டி வைத்து அந்த அருமை புரியாத நடிகராக அஜித் இருக்கிறார். மன்றம் வேண்டாம், போஸ்டர் வேண்டாம் என்றாலும் போர்டு இல்லாத ஒரு ரசிகர் கூட்டமாக ஸ்லீப்பர் செல் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். எந்த காதுக்குத்து நிகழ்ச்சியாகட்டும், திருமண நிகழ்ச்சியாகட்டும். எங்கு பார்த்தாலும் அஜித் நற்பணி மன்றம் என அவர்களே ஒரு பெயரை சூட்டி போஸ்டர்களை அடித்து அவர்களுக்குள்ளாகவே நாங்கள் தல ரசிகர்கள்டா என சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர்.
ஆனால் இது அஜித்துக்கு புரிய போவதில்லை. ரசிகர்களாவது புரிந்து அவர்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க வேண்டும் என இந்த ஒரு காட்டமான பதிவை தனியார் சேனலில் ஒரு நிருபர் கூறி அவருடைய ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார்.
இதையும் படின்க: கடவுளுக்கு நெருக்கமாக இருந்த ரஜினிகாந்த்..! வைரலான வீடியோ… ரசிகர்கள் உற்சாகம்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…