ரீரிலீஸ் ஆன தீனா 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?!.. உங்களுக்கு இது ஓவரா இல்லையா?!...
2004ம் வருடம் வெளியாகி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது கில்லி திரைப்படம். ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் இது. தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி வசூல் செய்த திரைப்படம் இது என சொல்லப்படுகிறது.
இந்த படத்திற்கு பின்னரே விஜயின் சம்பளமும், வியாபாரமும் உச்சத்திற்கு போனது. திரிஷாவுக்கு இப்படத்தின் வெற்றியால் பல படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து ஹிட் அடித்த ‘ஓக்கடு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் அமைந்தது. ஆனால், இப்படத்தின் இயக்குனர் தரணி தமிழில் பல மாற்றங்களையும் செய்து படத்தை எடுத்து பலரிடமும் பாராட்டை பெற்றார்.
இதையும் படிங்க: கொத்தனாருக்கு வீடு சொந்தம் ஆகுமா?!.. இளையராஜாவுக்கு இருப்பது பேராசை!.. விளாசிய பிரபலம்!..
இந்த படம் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போது எந்த பெரிய நடிகர்களின் படங்களும் தியேட்டரில் ஓடவில்லை என்பதலோ என்னவோ, இப்படத்திற்கு அதிக கூட்டம் சென்றது. குறிப்பாக, 18 வயதிலிருந்து 20 வயதுள்ள விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். ஏனெனில், கில்லி படம் வெளியானபோது இவர்கள் குழந்தைகளாக இருந்திருப்பார்கள். அல்லது பிறந்திருக்கவே மாட்டார்கள் என்பது முக்கிய காரணம். எனவே, திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது.
2 வாரங்களுக்கும் மேல் ஓடிய கில்லி படம் 25 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கெத்து காட்டினார்கள். இதைத்தொடர்ந்து விஜயின் போட்டி நடிகராக கருதப்படும் அஜித்தின் தீனா, மங்காத்தா, பில்லா போன்ற படங்கள் அவரின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: நீங்க தான் அடுத்த தளபதியா? கேள்விக்கு அல்டிமேட் ரியாக்ஷன் கொடுத்த கவின்…
இதில் மங்காத்தா திரைப்படம் தமிழகத்தில் வெளியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் தீனா, பில்லா ஆகிய படங்கள் வெளியானது. இப்படம் வெளியான சென்னை காசி தியேட்டரில் கில்லி பட பேனரை அஜித் ரசிகர் ஒருவர் கிழித்த சம்பவமும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தீனா திரைப்படம் வெளியாகி 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் இப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில், கில்லி படம் போல தீனா படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை என்பதுதான் உண்மை. எனவே, இப்படி பொய்யான செய்திகளை அஜித் ரசிகர்கள் கிளப்பி வருகின்றார்கள் என சொல்லப்படுகிறது.