நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன் என இத்தனை ஆண்டுகள் அடம்பிடித்துக் கொண்டு இருந்த பிரசாந்த் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் அந்தாதுன் படத்தை அந்தகன் என ரீமேக் செய்து நடித்திருந்தார். ஆனால், அந்த படம் அப்பா இயக்கத்தில் ஆஃப் பாயிலாக உருவானதா என்னவென்று தெரியவில்லை. இன்னமும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இனிமேலும் பழைய பில்டப், பந்தா எல்லாம் இருந்தால் பிழைக்க முடியாது என நினைத்த டாப்ஸ்டார் பிரசாந்த் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு சூனியம் வைக்க பார்க்குறாரே சியான் விக்ரம்!.. கங்குவாவுக்கு காலனாக மாறும் தங்கலான்?..
இதுவரை விஜய்யின் அப்பா, மகன் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், கோட் ஸ்குவாட் என படத்தில் லீடு ரோலில் நடித்து வரும் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் இருக்கும் அட்டகாசமான போஸ்டர் இன்று வெளியானது.
அந்த போஸ்டரை பார்த்த டாப் ஸ்டார் ரசிகர்களுக்கு எல்லாம் ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும். சமீபத்தில் மழை நிவாரண பணிகளுக்கு சென்ற போது கூட பிரசாந்த் விஜய்யுடன் சேர்ந்து நடிச்சிட்டு இருக்கேன் என்று தான் சொல்லியிருந்தார். ஆனால், இந்த போஸ்டரில் பக்காவாக வெங்கட் பிரபு பிரசாந்தை பின்னாடி நிற்க வைத்து விட்டார்.
இதையும் படிங்க: சமந்தா யாரோட பொங்கல் கொண்டாடியிருக்காங்க தெரியுமா?.. போகி கொளுத்தி, காத்தாடிலாம் விட்டுருக்காங்களே!
ஒரு காலத்தில் சினிமா விழா ஒன்றில் பிரசாந்துக்கு ஆளுயுர மாலை போடப்பட்டிருக்கும். அருகே நின்ற அஜித்தை யாரும் கண்டுக் கொள்ளக் கூட இல்லை என்றும் அந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் அஜித்தை அசிங்கப்படுத்தினார் என்றும் ஆனால், அதே பிரசாந்துக்கு இப்போ விஜய் படத்தில் பின்னாடி ஒரு ஓரமாக நிற்கும் இடம் கிடைத்து இருக்கிறது என செய்யாறு பாலு சமீபத்திய வீடியோவில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…