Connect with us

Cinema History

தல அஜீத் படங்களில் மாஸ் ஹிட் கொடுக்க தவறிய படங்கள்

தனி மனிதனாக நின்று எந்தவித பின்புலமும் இல்லாமல் அஜீத் திரையுலக வாழ்க்கையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ளார். உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதனால் தான் ரசிகர்கள் அஜீத்தை அன்புடன் தல என்று அழைத்து மகிழ்கின்றனர்.

இப்படிப்பட்ட அஜீத் தல என்று போற்றப்பட்ட போதும் அவரது கேரியரில் பல படங்கள் பிளாப் ஆனது என்பது தான் ஆச்சரியம். இவ்வளவுக்கும் அவரது நடிப்பை ரசிகர்கள் யாரும் எள்ளளவும் குறை சொல்ல முடியாது. அனைத்துப் படங்களிலும் ரசித்துப் பார்க்கும்படியாகத் தான் இருந்தது. இனி இவரது தோல்விப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

அசல்

asal ajith

2010ல் வெளியான அஜீத் படம் அசல். சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் சமீரா ரெட்டி, பாவனா, பிரபு, யூகி சேது, சுரேஷ், சம்பத் உள்பட பலர் நடித்துள்ளனர். சரண் இயக்கியுள்ளார். கதையை யூகி சேது எழுதினார். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அளவு ஓடவில்லை.

ஜனா

2004ல் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான படம் ஜனா. அஜீத்குமார், சினேகா, கருணாஸ், ஸ்ரீவித்யா, ரகுவரன், ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். தீனா இசை அமைத்துள்ளார். பூச்சாண்டி வந்துட்டான் என்ற பாடல் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளது.

ஏகன்

யூகிசேது கதை எழுத, ராஜூ சுந்தரம் இயக்கிய படம் ஏகன். அஜீத்துடன் நயன்தாரா, ஜெயராம், சுமன், நவ்தீப், பியா, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

ஜி

லிங்குசாமி இயக்கத்தில் 2005ல் வெளியான படம் ஜி. இந்தப்படத்தை எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். அஜீத்துடன் திரிஷா, சரண்ராஜ், விஜயகுமார், மணிவண்ணன், விசு, மனோபாலா, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

திருப்பதி

Thiruppathi Ajith

2006ல் வெளியான படம் திருப்பதி. பேரரசு இயக்கத்தில் வெளியான இந்தப்படத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். அஜீத், சதா, கஞ்சா கருப்பு, ரியாஸ்கான், அருண்பாண்டியன், லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படமும் எதிர்பார்த்த அளவு ஹிட் ஆகவில்லை.

ராஜா

எழில் இயக்கத்தில் 2002ல் வெளியான இந்தப்படத்தில் அஜீத், ஜோதிகா, பிரியங்கா திரிவேதி, வடிவேலு, ராதாரவி, லிவிங்ஸ்டன், வையாபுரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் தான் அஜீத் காதல் படத்தில் கடைசியாக நடித்துள்ளார். இதுவரை மென்மையான கதாநாயகனாகவே இருந்த அஜீத் இந்தப்படத்திற்கு பிறகு தான் அதிரடியாக நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லா 2

சக்ரி இயக்கத்தில் வெளியான பில்லா 2 படம் பில்லா படத்தைப் போல ஹிட் ஆகவில்லை. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்தார். அஜீத்துடன் பார்வதி ஓமனகுட்டன், புரூனா அப்துல்லா, பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர். 2012ல் இப்படம் வெளியானது.

பரமசிவன்

2006ல் வெளியான படத்தை பி.வாசு இயக்கினார். வித்யாசாகர் இசை அமைத்த படம். அஜீத்துடன் லைலா, நாசர், பிரகாஷ்ராஜ், ஜெயராம், விவேக், ரகசியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆஞ்சநேயா

Anjaneya Ajith

2003ல் வெளியான இந்தப்படத்தை என்.மகாராஜன் இயக்கினார். எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்தார். அஜீத்துடன் மீரா ஜாஸ்மின், ரகுவரன், ஆதித்யா, பொன்னம்பலம் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசை அமைத்தார். இந்தப்படமும் பிளாப் படங்களில் ஒன்றாகி விட்டது.

ஆழ்வார்

2007ல் செல்வா இயக்கத்தில் வெளியான படம். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்க மோகன் நடராஜன் தயாரித்துள்ளார். அஜீத்துடன் அசின், கீர்த்தி சாவ்லா, விவேக், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்;த்தனர். ஆனால் அந்த அளவு ஹிட் கொடுக்கவில்லை.

google news
Continue Reading

More in Cinema History

To Top