ஃபாரின் டிரிப் கிளம்பிய அஜித்?.. ஏர்போர்ட்டில் கையெடுத்து கும்பிட்ட வீடியோ வைரல்!..

by Rohini |   ( Updated:2022-12-01 05:41:09  )
ajith_main_cine
X

அஜித்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் உன்னத நடிகர் என அன்பால் அழைக்கப்படும் அஜித் இப்போது துணிவு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். துணிவு படம் வருகிற பொங்கல் அன்று திரையில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

ajith1_cine

அஜித்

மேலும் படத்தில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், மகாநதி சங்கர் , அமீர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். படம் ஆக்‌ஷன் கலந்த திரில்லர் மூவியாக எடுக்கப்பட்டிருக்கின்றது. படத்தை எச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்கிறார். படத்தின் ஒரு பாடலை மஞ்சு வாரியாரும் பாடியிருக்கிறார். மேலும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க :மோகனுக்கு மைக் பிடிக்கும் ஸ்டைல் எப்படி வந்தது தெரியுமா?…சுவாரஸ்ய பிளாஷ்பேக் இதோ….

படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பாங்காங்கில் நடைபெற்றது. சென்னை மௌண்ட் ரோடு மாதிரி ஒரு செட்டை அமைத்து ஐதராபாத்தில் சூட் செய்தனர். ஒரே ஒரு பாடல் காட்சியை மட்டும் கடைசியாக சென்னையில் எடுத்து முடித்தனர். அந்த பாடல் காட்சியோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் அஜித் படத்திற்கான ஒட்டுமொத்த கெட்டப்பையும் மாற்றி விட்டார்.

ajith2_cine

அஜித்

தாடியை க்ளீன் ஷேவ் செய்து பார்க்கவே மிகவும் இளமையாக தெரிகிறது. அந்த புகைப்படங்கள் எல்லாம் நேற்று இணையத்தில் வைரலானது. மேலும் துணிவு படத்தின் படப்பிடிப்பை முடித்து இரண்டு மாதகால இடைவெளியில் வெளி நாடு விடுமுறை பயணம் மேற்கொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்தன.

இதையும் படிங்க :இப்படி ஒரு பிரியாணி என் வாழ்க்கைல சாப்டதே கிடையாது… சூர்யா புகழ்ந்த அந்த பிரபலம்…

இந்த நிலையில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஏர்ப்போர்ட்டில் அஜித் புது லுக்கில் கிளம்பி போகும் படியான வீடியோ இணையத்தில் உலா வருகின்றது. இதைப் பார்த்து ரசிகர்கள் தல என்ன சுற்றுலா பயணமா? என்று தங்களின் கமெண்டுகள் மூலம் கேட்டு வருகின்றனர்.

Ajith

Ajith

அது உண்மையாக இருந்தால் இந்த வெளிநாடு டிரிப்பை முடித்துக் கொண்டு நேராக அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அந்த புதிய படத்தில் இணைவார் என்று தெரிகிறது. மேலும் அந்த வீடியோவில் செக்கிங் அதிகாரிகள் அஜித்தை ஸ்கேன் செய்து முடிக்கும் போது அவரை பார்த்து அஜித் கையெடுத்து கும்பிட்டு விடைபெறும் விதமாக அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/ClnIlCaBF4h/?utm_source=ig_web_copy_link

Next Story