Categories: Cinema History Cinema News latest news

இப்பதான் கமல்!…அஜித் இத எப்பவோ செஞ்சிட்டார்!…பிரபல இயக்குனர் பதிவு….

கமல்ஹாசன் தயாரித்து நடித்து கடந்த வாரம் ரிலீஸ் ஆகியிருந்த திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிரட்டலாக இயக்கி இருந்தார். அதனால், திரையிட்ட அனைத்து இடங்களிலும் பேராதரவை பெற்று வருகிறது.

இந்த வெற்றியை அனைவர்க்கும் தனது அன்பான பரிசு மூலம் காண்பித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு சுமார் 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசளித்து உள்ளார் .

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இதெல்லாம் அஜித்குமார் எப்போதோ செய்து விட்டார் என்று, எஸ்.ஜே.சூர்யா பேசிய விடியோவை பதிவிட்டு வருகின்றனர். அதாவது, எஸ்.ஜே.சூர்யா முதன் முதலாக இயக்குனரான திரைப்படம் வாலி.

இதையும் படியுங்களேன் – 80 லட்சம் கார், 45 லட்சம் வாட்ச், 1.5 லட்சம் பைக்… இதெல்லாம் கமல் செஞ்சதில்லையே.! பின்னணி இதுதானாம்.!

அஜித் தான் படத்தின் ஹீரோ. ஷூட்டிங் சமயத்தில் அஜித், எஸ்.ஜே.சூர்யாவுக்கு தான் உபயோகப்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்துள்ளார். அதன் பிறகு, படம் முடிந்த பிறகு அதனை பார்த்த அஜித் மகிழ்ந்து , எஸ்.ஜே.சூர்யாவுக்கு புதிய வெள்ளை சான்ட்ரோ காரை பரிசாக அளித்து இருந்தார்.

இதனை எஸ்.ஜே.சூர்யாவே ஒரு நேர்காணலில் பதிவிட்டு இருப்பார். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
Manikandan