அஜித் இல்லைனா இத நான் செஞ்சிருக்கவே முடியாது! மனம் உருகி பேசிய இயக்குனர் - தல கைவச்சா ‘பொன்’தான் போல
Actor Ajith: விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித் தற்போது துபாயில் தன் குடும்பத்தாருடன் ஜாலியாக ஒரு டிரிப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு போட்டில் அஜித் தன் குடும்பத்துடன் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அவரை பார்த்ததும் ரசிகர்கள் தல.. தல என்று கூச்சலிட அஜித் அந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து செல்வது போல அந்த வீடியோ வைரலாகி வருகின்றது. ஒரு பக்கம் விஜயகாந்த் மறைவிற்கு வராத அஜித் இப்போது தன் குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா செல்லும் இந்த காட்சிகள் ஒரு சில பேரை எரிச்சலுக்கு ஆளாக்குகிறது.
இதையும் படிங்க: நடிகர்கள் எல்லாம் ஷூட்டிங் போகலை…ஃபேமிலி டூருப்பா… அடுத்த ப்ளான் இதான்..வெளுத்துவிட்ட பிரபலம்..!
விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதை அடுத்து வெற்றிமாறன் படத்திலும் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அஜித்தின் 65வது படத்தை பிரசாந்த் நீல்தான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் அஜித்தை பற்றி சமீபத்தில் ஒரு இயக்குனர் பகிர்ந்த சீக்ரெட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. Fox & crom Studios உரிமையாளர் ராஜேஷ்கண்ணா. இவர் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் கூட.
இதையும் படிங்க: அழுகாச்சி காவியமான பாக்கியலட்சுமி.. உங்க பாசம் புரியுது.. ஆனா ரொம்ப லெங்தா போகுதுப்பா!..
2019 ஆம் ஆண்டு மாயன் என்ற படத்தை எடுத்த ராஜேஷ் கண்ணா இன்னும் ஒரு சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். அஜித்தின் ஒரு படத்தில் ராஜேஷ் பணியாற்றியிருக்கிறாராம். அப்போது அஜித் என்ன செய்ய போகிறாய் வருங்காலத்தில்? என்று கேட்டாராம்.
அதற்கு எதாவது செய்ய வேண்டும் அஜித். சாதிக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் ராஜேஷ். உடனே அஜித் அதற்கு வெறும் பெயரை வைத்துக் கொண்டு ஒன்னும் பண்ண முடியாது. அதனால் ஒரு ஸ்டூடியோ கம்பெனி ஆரம்பித்து விடு என கையில் பணத்தையும் கொடுத்து உதவினாராம்.
இதையும் படிங்க: சந்தானம் படத்தில் அட்ஜெஸ்மெண்ட் கேட்ட அப்பா வயது இயக்குனர்!.. பகீர் கிளப்பும் யாஷிகா ஆனந்த்…
அவர் கொடுத்த பணத்தில் உருவானதுதான் இந்த Fox & crom Studios கம்பெனி என்றும் அஜித் ஷாலினி ஆரம்பித்து வைத்ததுதான் என்றும் கூறினார்.