இயக்குனருக்கு வந்த வாய்ப்பு.. கமலுக்காக விட்டுக்கொடுத்த அஜித்!.. அட அந்த படமா?!...
பொதுவாக பெரும்பாலான நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களின் இயக்குனர் வேறு ஒரு படத்தை இயக்க போகக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். ஏனெனில், சில இயக்குனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குவார்கள். மாதத்தில் 15 நாள் ஒரு படத்தின் படப்பிடிப்பு. மீது 15 நாள் வேறு படத்தின் படப்பிடிப்பு என மாறி மாறி நடக்கும்
கவுதம் மேனன் எல்லாம் அப்படிப்பட்டவர்தான். தற்போது இயக்குனர் ஷங்கரே கமலை வைத்து இந்தியன் 2 ஒரு பக்கமும், தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். அதேபோல், சில நடிகர்கள் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார்கள். சில நடிகர்கள் ஒரே நேரத்தில் 2 படங்களில் கூட மாறி மாறி நடிப்பார்கள்.
இதையும் படிங்க: உங்கள தேடிட்டு இருந்தோம்! ரசிகர் சொன்னதுக்கு சரியான தக் லைஃப் கொடுத்த அஜித்.. குசும்பு புடிச்ச தல
இதில் அஜித் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார். அதேபோல், தன்னுடைய பட இயக்குனர் தனது படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பார். அப்படிப்பட்ட அஜித் ஒரு நடிகருக்காக தனது கொள்கையை விட்டுக்கொடுத்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
அஜித்தை வைத்து காதல் மன்னன் படத்தை இயக்கியவர் சரண். இவர் பாலச்சந்தரின் உதவியாளர். முதல் படமே சூப்பர் ஹிட். அவருடன் வேலை செய்வது அஜித்துக்கு பிடித்திருந்தது. அதனால்தான் அவரின் இயக்கத்தில் அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்களில் நடித்தார்.
அட்டகாசம் படத்தை சரண் இயக்கி கொண்டிருந்தபோது கமலை வைத்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. படப்பிடிப்பை உடனே துவங்க வேண்டிய நிலை. என்ன செய்யலாம் என சரண் கையை பிசைந்து கொண்டிருந்தபோது அதை தெரிந்து கொண்ட அஜித் ’கமல் சாரோட படத்தை பண்ணிட்டு வாங்க. தயாரிப்பாளர்கிட்ட நான் பேசிக்கிறேன்’ என சொல்லி அனுப்பி வைத்தாராம். மேலும், சரண் அந்த படத்தை முடித்துவிட்டு வரும் வரை 3 மாதங்கள் அவருக்காக காத்திருந்தாராம்.
இதையும் படிங்க: அட மீண்டும் மீண்டுமா? அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இந்த இயக்குனரா?