துணிவு vs வாரிசு: முதல் வெற்றியை பதிவு செய்த அஜித்? என்ன நடந்தது?
விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் பொங்கல் ரிலீஸுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில் அஜித் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படத்தில் விஜயிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பல நாட்களாக எதிர்பார்த்திருந்த ஜோடி என்பதால் முதல் நாளில் இருந்தே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதிலும் எப்போதுமே விஜயின் இண்ட்ரோ பாடலை தான் படக்குழு முதல் சிங்கிளாக ரிலீஸ் செய்யும். இந்த படத்துக்கு தான் நாயகன் மற்றும் நாயகியின் ஜோடி பாட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹிட் படத்தை மிஸ் செய்த டாப் 5 பிரபலங்கள்.. அட ஒரு படத்திற்கு இவ்வளவு பேரா?…
வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் ரிலீசாகி சக்கை போடு போட்டது. விஜயின் தன்னுடைய சொந்த குரலில் பாடகி மானசாவுடன் இணைந்து பாடிய இந்த பாடல் 500000 லைக்ஸ் வாங்க 59 நிமிடம் எடுத்துக் கொண்டது. ஆனால் நேற்று அஜித் நடிப்பில் வெளியான சில்லா சில்லா பாடல் வெறும் 47 நிமிடங்களில் இந்த சாதனையை புரிந்துள்ளது. ஏற்கனவே இந்த பாடல் இணையத்தில் கசிந்தும் இந்த சாதனையை அஜித் செய்திருப்பது வைரலாகி வருகிறது.
ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியிருக்கும் ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்களிடம் செம லைக்ஸை குவித்து வருகிறது. இது துணிவு படக்குழுவிற்கு முதல் வெற்றி எனக் கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் செம ஹேப்பி மூடில் இருக்கிறார்கள்.