அஜித் 1000 முறை கேட்ட பாடல் இதுதானாம்! படத்தின் இயக்குனரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

Published on: January 25, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அதற்காக கடந்த இரண்டு மாதங்களாக அஜர்பைஜானிலேயே இருந்து படப்பிடிப்பில் தன்னை முழு மூச்சுடன் ஈடுபடுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தை எப்படியாவது ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அதனால் பிப்ரவரிக்குள் படத்தை முடிக்க தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். அஜித்தின் கெரியரில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. அவர்கள் கொடுத்த சில நல்ல படங்களால்தான் அஜித் இந்தளவு ஒரு உயரத்தை அடைய முடிந்தது. அதன் காரணமாகத்தான் கோடிக்கணக்கான ரசிகர்களையும் தன் வசப்படுத்த முடிந்தது.

இதையும் படிங்க: விஜயகாந்த் இறந்த இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் நடந்தது இதுதான்!… ரகசியத்தினை உடைத்த பிரேமலதா…

அவருடைய கெரியரில் இயக்குனர் சரண் முக்கிய பங்காற்றியவர். அஜித்தை வைத்து காதல் மன்னன், அட்டகாசம், அமர்க்களம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் சரண். ஏன் அஜித் – ஷாலினி நிஜ வாழ்க்கையில் இணைவதற்கும் காரணமாக இருந்தவர் சரண். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித்தை பற்றி சில விஷயங்களை கூறியிருந்தார்.

அதாவது ஜெமினி படத்தை எடுத்து முடித்த கையோடு அஜித்தை வைத்து ஏறுமுகம் என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டாராம் சரண். பரத்வாஜ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் அமைந்த ஒரு பாடல் காட்சியை கூட படமாக்கி விட்டார்களாம். அந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஷாஜகான் பட ஹீரோயின் ரிச்சா பல்லோட்டை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்ததாம்.

இதையும் படிங்க: மௌனம் கலைத்த தளபதி!.. அரசியல் அறிவிப்பு எப்போ தெரியுமா?!.. லீக் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்..

அதற்கு முன் ஒரு வாரம் அந்த பாடல் காட்சியை அஜித்தை வைத்து படமாக்கியிருக்கிறார் சரண். அந்த பாடலை ஒரு 1000 முறையாவது அஜித் கேட்டிருப்பார் என்றும் அந்தளவுக்கு அந்த பாடல் வரிகள் நரம்பு வெடைக்க ஒரு தெம்பூட்டும் விதத்தில் அமைந்திருக்கும் என்றும் ஆனால் சில பல பிரச்சினைகளால் அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது என சரண் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.