Connect with us
vijay

Cinema News

மௌனம் கலைத்த தளபதி!.. அரசியல் அறிவிப்பு எப்போ தெரியுமா?!.. லீக் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்..

Actor vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி பல வருடங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அவரும் அவரது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றினார். தமிழகத்தில் இரு பெரும் அரசியல் சக்திகளாக திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பின் விஜய் மக்கள் இயக்கத்தினர் அரசியல் செயல்பாடுகளில் ஆக்டிவாக இறங்கினார்கள்.

விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தலும், அவரின் ரசிகர் மன்றத்தினர் ஏழைகளுக்கு உணவளிப்பது, ரத்த தானம் செய்வது, உடல் ஊனமற்றவர்களுக்கு வண்டி கொடுப்பது என பல உதவிகளையும் செய்து வந்தனர். மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்திலும் அவர்கள் செயல்பாடு அதிகமாக இருந்தது.

இதையும் படிங்க: பண விஷயத்தில் கறார் காட்டிய கவுண்டமணி.. கேப்டன் மனசு யாருக்கு வரும்? கங்கை அமரன் பகிர்ந்த சீக்ரெட்

அதேநேரம், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவளித்தபோது விஜயின் புகைப்படத்தை ஒருவர் பிடித்துக்கொண்டே நின்றது ட்ரோலில் சிக்கியது. விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு அரசியலுக்கு வந்துவிட்டனர்.

vijay

கடந்த உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வெற்றிகளையும் பெற்றனர். ஆனால், விஜய் அமைதியாகவே இருந்தார். ஆனால், அடிக்கடி அவரின் இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்து அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசி வந்தார். மேலும், அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசு கொடுப்பது, தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தது என சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கினார்.

இதையும் படிங்க: அண்ணன் தம்பிக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா? பிரபுதேவா குடும்பத்தில் வெடிக்கும் பூகம்பம்

இந்நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் விஜய் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் மக்கள் இயக்கத்தின் தெரிவித்துள்ளனர். பனையூரில் நடந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். முதலில் அரசியல் கட்சியை பதிவு செய்வோம். அதன்பின் தனித்து போட்டியா இல்லை மற்ற கட்சிகளுடன் கூட்டணியா என்பதை முடிவும் செய்வோம் என விஜய் தெரிவித்துள்ளாராம்.

விஜய் போகும் வேகத்தை பார்த்தால் 2024 பாராளுமன்ற தேர்தலிலேயே அவரின் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: செட்டப் செல்லப்பாவாக மாறிய சிவகார்த்திகேயன்?.. பின்னாடி டோலிவுட்டே சிரிக்குது பங்கு!..

google news
Continue Reading

More in Cinema News

To Top