இந்த பாட்ட கேட்டதும் உடனே கால்ஷீட் கொடுத்த அஜித்! அதான் இவ்ளோ எனர்ஜியா? என்ன படம் தெரியுமா

by Rohini |   ( Updated:2024-03-26 04:13:35  )
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார். சமீப காலமாக அஜித் சம்பந்தப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் கூட அவர் சமைக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அஜித் சம்பந்தப்பட்ட எந்த ஒரு புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். அந்த அளவுக்கு ரசிகர் படை பலத்துடன் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். இந்த நிலையில் அவர் நடித்த ஒரு படத்தின் பாடல் பற்றிய ரகசியத்தை பிரபல இசையமைப்பாளரான பரத்வாஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: சிஜி புலின்னு கலாய்க்காதீங்க!.. அதோட ஹிஸ்டரி தெரியாம!.. கங்குவா சீக்ரெட் சொன்ன தயாரிப்பாளர்!..

அஜித்தையும் ஷாலினியையும் இணைத்த படம் அமர்க்களம். அஜித்தின் கேரியரில் அமர்க்களம் மிக மிக முக்கியமான படமாக கருதப்பட்டது. ஒரு கேங்ஸ்டராக அஜித் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தில் இருந்து தான் ஷாலினியை அஜித் காதலிக்க ஆரம்பித்தார். படம் வெளியானதும் இவர்களது திருமணம் அனைவர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் படத்தில் மிக முக்கியமான பாடலாக கருதப்படுவது சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். இந்தப் பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியன் பாடியிருப்பார். பாடல் முழுவதும் மூச்சு விடாமல் பாடி ஒரு பெரிய சாதனையை படைத்திருப்பார் பாலசுப்ரமணியன்.

இதையும் படிங்க: டைரக்டர்களை எப்படி சூஸ் பண்ணனும்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்!.. ஆர்சி 17 இயக்குநர் இவர்தான்!

இந்த படத்திற்கு இசையமைத்தவர் பரத்வாஜ். இந்த படத்தின் ஆரம்பத்தில் அஜித் ஏதோ ஒரு விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். ஏகப்பட்ட காயங்களுடன் உடல் முழுக்க கட்டுகள் போட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம் அஜித். அதனால் அஜித்தின் கால்ஷீட் கிடைக்குமா கிடைக்காதா என்ற ஒரு பயத்திலேயே இயக்குனர் சரண் இருந்தாராம்.

படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் மற்றும் ஷாலினி பாடிய சொந்த குரலில் பாட ஆகிய இரு பாடல்களையும் பரத்வாஜ் ரெக்கார்டு செய்து முடித்து விட அதை படத்தின் இயக்குனர் சரண் மருத்துவமனையில் இருந்த அஜித்திடம் போட்டு காண்பிப்பதற்காக சென்றாராம்.

இதையும் படிங்க: சிவாஜி குடும்பத்திலிருந்து இவ்வளவு நடிகர்களா?!.. அட லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கே!..

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலை அஜித்தின் காதில் மாட்டிவிட்டு போட்டு காண்பிக்க அதைக் கேட்ட அஜித் உடனே தன்னுடைய கால்ஷீட்டை கொடுத்தாராம். இந்த படத்தில் நான் தான் நடிப்பேன் என்று மிக உறுதியுடன் கூறி சரணை நிம்மதி அடைய வைத்தார் என பரத்வாஜ் ஒரு பேட்டியில் கூறினார்.

Next Story