சிவாஜி குடும்பத்திலிருந்து இவ்வளவு நடிகர்களா?!.. அட லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கே!..

இதுவரை ஆறாயிரத்திற்க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளது. 1931ம் ஆண்டு வெளிவந்த "காளிதாஸ்" என்ற படமே முதலாவது பேசும் படம். இத்தகைய சிறப்பான வரலாற்றை கொண்டுள்ள தமிழ் சினிமாவில் ஒரு குடும்பம் மட்டுமே மூன்று தலைமுறைகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

"பராசக்தி" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பால் வானளாவிய புகழை பெற்றவர் சிவாஜி கணேசன். ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சிவாஜி கணேசன். தனக்கு பிறகு தன்னுடய குடும்பத்திலிருந்து வேறு யாரும் திரைத்துறைக்கு வந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்திவந்தார்.

இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் மட்டுமில்லை!.. அட அதையும் பண்றாரே லோகேஷ்!.. வெளியானது ’இனிமேல்’!..

இப்படி இருக்கையில் அவரது எண்ணங்களை உடைத்து எறிந்து நடிக்க வந்தவர் சிவாஜியின் மகனான பிரபு. "சங்கிலி" என்ற படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை துவங்கிய பிரபு தற்பொழுது வரை நடித்து வருகிறார். ஒரே ஆண்டில் அதிகமான படங்களில் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்கின்ற தனது தந்தையின் ஆசையை தாண்டி சினிமாதுறைக்கு வந்த இவர் 1988ம் வருடத்தில் மட்டும் 14 படங்களில் நடித்திருந்தார்.

இதில் 13 படங்கள் நூறு நாட்களை கடந்து ஓடியது. இவர் நடிப்பில் வெளியான "சின்னதம்பி" படம் வசூலில் மட்டும் அல்லாது அதிகமான சாதனைகளை தன் வசப்படுத்திக்கொண்டது. தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும், இவரை தொடர்ந்து நடிக்க வந்தவர் இவரது சகோதரர் ராம்குமார். இயக்குனர் சங்கரின் "ஐ" படத்தின் மூலம் இவர் சற்று பிரபலமடைந்தார். இவர்களை தொடர்ந்து நடிக்க வந்தவர் "சிவாஜி" மனோ. தற்பொழுது தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: தம்பி கண்டிப்பா ஜெயிக்கணும்!.. விஜயின் அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி!.. இது செம டிவிஸ்ட்!..

"பராசக்தி" படத்தில் சிவாஜி பேசிய "சக்சஸ்' எனற வசனத்தை தனது முதல் பட பெயராக கொண்டு களமிறங்கியவர் துஷ்யந்த். இவர் சிவாஜியின் பேரன். இவரை தொடர்ந்து விக்ரம் பிரபு தமிழ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

மேலும் இவர்கள் குடும்பத்து உறுப்பினர் தர்ஷன் ராம்குமாரை விரைவில் திரையில் காட்ட முயற்சிகள் நடந்து வருகிறது. இப்படி சிவாஜி கணேசனின் "அன்னை" இல்லத்திலிருந்து மட்டுமே 550க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளது.

 

Related Articles

Next Story