
Cinema News
விக்ரமுக்கு அஜீத் செய்ற பெரிய உதவி… எவ்ளோ நல்ல மனசுன்னு பாருங்க..!
சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் போராடி முன்னுக்கு வந்தவர் விக்ரம். அவர் சினிமாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தார். ஆனால் எந்தப் படமும் அவரைக் கைதூக்கி விடவில்லை. ஒரு கட்டத்தில் சினிமா எல்லாம் உனக்கு வராதுப்பா. போய் வேற தொழிலைப் பாருன்னு கூட அவருக்கிட்ட நிறைய பேரு சொல்லிருப்பாங்க.
ஆனா அதை எல்லாம் பொருட்படுத்தாம சினிமாவையே ரொம்ப நேசித்து அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்போதுதான் அவருக்கு சேது படம் வந்து கைதூக்கி விட்டது. அதன்பிறகு அவர் ஓஹோன்னு வளர ஆரம்பித்து விட்டார். அதே மாதிரி போராடி வந்தவர்தான் அஜீத்குமார். சினிமாவில் தன்னை மாதிரியே பெரும் போராட்டங்களை சந்தித்து வந்து இப்போது வீரதீர சூரன் வரை விக்ரம் வளர்ந்து இருக்கிறார் என்பதை அஜீத்தும் உணர்ந்து இருப்பார்.
அதனால்தானோ என்னவோ இப்போது அவர் ஒரு முடிவு எடுத்ததாக ஒரு தகவல் வந்துள்ளது. அது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. வரவேற்கத் தக்க விஷயம். அதாவது வருகிற 27ம் தேதி வரைக்கும் குட்பேட் அக்லி சம்பந்தப்பட்ட எந்த ஹைப்போ, அப்டேட்டுமோ கொடுக்காதீங்கன்னு அஜீத்தே சொன்னதாக ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் என பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். மேலும் அவர் சொல்வது இதுதான்.
அப்படி ஒரு விஷயம் நடந்தால் அது சினிமா உலகிற்கே ஆரோக்கியமான விஷயம். இது மனசார வரவேற்கக்கூடிய விஷயம். இன்டஸ்ட்ரி ஒற்றுமையாக இருக்கு என சந்தோஷப்பட வேண்டிய விஷயம். காரணம் என்னன்னா 27ம் தேதி வீரதீர சூரன் படம் ரிலீஸ் ஆகிறது. அந்தப் படத்துக்காக குட் பேட் அக்லியைக் கொஞ்சம் ஆறப்போடுங்க.

veeratheerasuran2
எந்த அப்டேட்டும் கொடுக்காதீங்க. நிறுத்தி வைங்கன்னு சொல்லிருக்காராம் அஜீத். அதுக்குக் காரணம் விக்ரம். அவர் இந்த இடத்துக்கு வர்றதுக்கு எவ்வளவு போராடிருக்காருன்;னு தெரியும். ஒரு கால் உடைஞ்சி, ராசியில்லாத நடிகர் ஆகி, ட்ரெண்ட் செட்டர் ஸ்ரீதரே அறிமுகப்படுத்தி, கேமரா கவிஞர் பிசி.ஸ்ரீராம் படம் எடுத்து அது ஓடாம போயிடுச்சு. ஒரு கட்டத்துல யாராவது டப்பிங் இருந்தா பேச வாய்ப்பு கொடுங்கப்பான்னு கேட்குற சூழலுக்கு வந்தவர்தான் விக்ரம்.
கதாநாயகனா 3 படம் பண்ணியாச்சு. சினிமா வாய்ப்பு இல்லாம டப்பிங் போனா என்ன கிடைக்கும்? வாழ்க்கையே வெறுத்துடும். அந்த நிலையில் இருந்து மீண்டு வந்தவர் விக்ரம். அதற்குக் காரணம் சினிமாவை நேசித்துப் போராடி வந்தார். ஒரு கட்டத்தில் சேதுவில் இருந்து ஆரம்பித்து தங்கலான், இன்று வீரதீர சூரன் வரை வந்து நிற்கிறார் விக்ரம் என்கிறார் செய்யாறு பாலு.