நடு ரோட்டில் 'அந்த' ஹீரோயினை அஜித் கட்டிபிடிச்சிட்டார்.! இப்டி வெளிப்படையா சொல்லிடீங்களே சார்.!
தமிழ் சினிமாவில் மிகவும் வெளிப்படையாக மனிதர் என்றால் அது அஜித் தான். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதனை அப்படியே பேசிவிடுவார். இதனை அவரே வெளிப்படையாக பலமுறை கூறியுள்ளார். ஏன். எல்லாரும் வருவது சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பது தான் எனக்கும் அதே ஆசைதான் என வெளிப்படையாக பேசியவர் அஜித்.
இவர் கூறுவது பல முறை பத்திரிக்கையாளர்களால் திரித்து கூறப்பட்டதால், ஒரு கட்டத்தில் பத்ரிக்கையளர்களை தவிர்த்துவிட்டார். அதனை தொடர்ந்து , பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்துவிட்டார்.
இதையும் படியுங்களேன் - போனி மாம்ஸ்க்கு தண்ணி காட்டிய ஹேக்கர்க்ஸ்.! வெளியான வலிமை பிரிண்ட்….
இவர் விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் எனும் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் கார்த்தி - ரோஜா நாயகன் -நாயகி. இதில் ஒரு காட்சி மழையில் எடுக்கப்பட்டிருந்ததாம். அந்த ஷூட்டிங் பார்க்க நடிகை ஹீரா வந்துள்ளாராம். அஜித் அருகில் யார் இருக்கிறார்கள் என்ன என்பதையெல்லம் பார்க்கமாட்டாராம்.
அஜித் எந்த இடத்திலும் கூச்சப்படமாட்டாராம். மழையில் சூட்டிங் முடிந்ததும் குளிர் தாங்க முடியாமல் அருகில் இருந்த ஹீராவை மொத்த யூனிட்டிற்கு முன்னால் கட்டி பிடித்துவிட்டாராம். அந்தளவுக்கு தனக்கு முன்னால் யார் இருக்கிறார், நாம் இதை செய்தால் யாரும் ஏதேனும் சொல்வார்களா என எதனையும் பொருட்படுத்தமாட்டாராம். தனக்கு தோன்றியதை செய்து முடிப்பவர் அஜித் என கூறியுள்ளார் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரன்.
இவர் தான் அடுத்து அஜித்தை வைத்து நீ வருவாய் என எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.