மே 1 ல கெத்தா மறுபடியும் இறங்கப் போற அஜித் படம்..! அந்தப் படமா? அட்ரா சக்கை அட்ரா சக்கை!

ajith
'தாரை தப்பட்டை கிழியப் போது'ன்னு அஜித் தனது கணீர் குரலால் பேசும் போது வீரம் படம் வீறிட்டு எழுகிறது. இந்தப் படத்தை எப்போ பார்த்தாலும் மாஸ் தான். சமீப காலமாக பல படங்கள் ரீரிலீஸ் ஆகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில் விஜயின் கில்லி, சச்சின் படங்கள் வெளியாகி நல்ல வசூலைக் கொடுத்தன. வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாள். அதை முன்னிட்டு வீரம் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்தப் படத்துக்கான டிரெய்லரும் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
2014ல் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்த மாஸ் படம் தான் வீரம். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விதார்த், பாலா, முனீஷ்காந்த், சந்தானம், நாசர், அதுல் குல்கர்னி, தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் முழுவதும் அஜித் சும்மா கெத்தாக நடித்து அசத்தி இருப்பார். பேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் படமாக வந்தது. சிறந்த மசாலா படம் என்றும் சொல்லலாம்.
அதே நேரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இருந்தது. நல்ல வசூலைப் பெற்ற இந்தப் படம் பெரும் வரவேற்புக்குள்ளானது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் எல்லாம் பட்டையைக் கிளப்பின. அஜித்தின் ரசிகர்களை ஆட்டம் போடச் செய்தன. இன்றும் பல ரசிகர் மன்றங்களில் இந்தப் படத்தில் இருந்துதான் பாடல்கள் எந்த பங்ஷன் என்றாலும் போட்டு ஆட்டம் போடுவார்கள்.

நல்லவன்னு சொல்வாங்க, இவள் தானா, தங்கமே தங்கமே, ஜிங் ஜக்கான் ஜிங் ஜக்கான், ரத கஜ வீரம் என பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். படத்தில் பைட் எல்லாமே தூள் பறக்கும் வகையில் தான் இருந்தன. இந்தப் படம் இப்போது மறுபடியும் வெளியாவது அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான பேன் பாய் படமாக குட்பேட் அக்லி வந்தது. அதைத் தொடர்ந்து இந்தப் படமும் மாஸாக களம் இறங்குவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளாகி உள்ளது.