அஜித் படத்துல கூட பிரச்சினை இல்லை! சூர்யாகிட்ட முடியல - அந்தப் படம் ஓடாததுக்கு காரணமே இதுதான்

by Rohini |
surya
X

surya

Ajith - Surya: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் சூர்யா. இருவரும் தங்களது கடின உழைப்பாலும் முயற்சியாலும் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களாக உயர்ந்து நிற்கிறார்கள். ஆனால் ரசிகர்களை சந்திப்பது, உரையாடுவது என இந்த விஷயத்தில் அஜித்துக்கு நேர் எதிராக இருப்பவர் சூர்யா.

தன் ரசிகர் வீட்டில் எதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது துயரமான சம்பவம் என்றால் முதல் ஆளாக நிற்கிறார் சூர்யா. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அறக்கட்டளை சார்பாகவும் ஏகப்பட்ட மாணவ மாணவியர்களின் கல்விக்காக பல உதவிகளையும் செய்துவருகிறார்.

இதையும் படிங்க: படம் முழுவதும் எடுத்த பின் ஹீரோவை மாற்றச் சொன்ன ஏவிஎம் செட்டியார்… அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!

அஜித்தும் பல நல்ல செயல்களை செய்தாலும் வெளியில் தெரிவதில்லை. இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அஜித் மற்றும் சூர்யாவுடன் இணைந்து படங்களை இயக்கியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட அனுபவங்களை ஒரு பேட்டியின் மூலம் ரசிகர்களுக்காக கூறினார்.

அதாவது அஜித்தும் வெங்கட் பிரபுவும் இணைந்து மங்காத்தா என்ற ஒரு பக்கா ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்தில் பணிபுரிந்த போது தான் சுதந்திரமாக வேலை செய்ததாகவும் சொந்த முடிவையே எடுத்து படத்தை முடித்ததாகவும் வெங்கட் பிரபு கூறினார்.

இதையும் படிங்க: சீடியை தூக்கி கொண்டு வாய்ப்பு தேடி அலைந்த அட்லீ!.. சினிமாவில் நுழைந்தது இப்படித்தான்!…

ஆனால் சூர்யாவுடன் மாஸ் என்ற படத்தை கொடுத்த வெங்கட் பிரபு இந்த படத்தில் பாதி முடிவுகள் சூர்யாதான் எடுத்தாராம். அடிக்கடி கோபப் படுவாராம் சூர்யா. கோபப்படும் நேரத்தில் சூர்யாவின் கோபத்தை குறைக்க வெங்கட் பிரபு ‘இது உங்க படம். நீங்க தான் ஹீரோ. நீங்க எடுக்கிறதுதான் முடிவு. அப்புறம் எதுக்கு அடிக்கடி கோபப்படுகிறீர்கள்?’ என்று சொல்லி சமாதானப்படுதுதுவாராம் வெங்கட் பிரபு.

ஆனால் அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இதற்கு காரணம் ரசிகர்களிடம் நல்ல முறையில் நாங்கள் கொண்டு செல்ல வில்லை என்று வெங்கட் பிரபு கூறினார். டிரெய்லரிலாவது என்ன கதை என்று சொல்லி ரசிகர்களை தயார்படுத்தியிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: த்ரிஷா அக்கா விஜய் சொல்லாததையா மன்சூர் சொல்லிட்டாரு? பொங்கி எழும் நெட்டிசன்கள்

ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. மங்காத்தா படத்தில் அஜித் ‘எத்தன நாளைக்குத்தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது?’ என்ற டையலாக்கை சொல்ல வைத்ததன் மூலம் ரசிகர்களை தயார்படுத்தியிருப்பேன். ஆனால் மாஸ் படத்தில் இது ஒரு பேய் படம் என்றும் ஆவி சம்பந்தப்பட்ட கதை என்றும் சொல்லியிருக்க வேண்டும்.

அப்படி எதுவும் சொல்லாமல் இருந்ததுதான் நாங்கள் செய்த தவறு என்று வெங்கட் பிரபு படத்திற்கான தோல்விகளை பற்றி அந்தப் பேட்டியில் கூறினார்.

Next Story