அஜித் ஒரு மாதிரியான கேரக்டர்! இவ்ளோ நாள் எங்கப்பா இருந்தீங்க? பிரபலம் கொடுத்த ஷாக்

ajith
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய அந்தஸ்தில் இருக்கும் நடிகர் அஜித். ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு நடிகராக இருந்தாலும் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் பப்ள்சிட்டியையும் விரும்பாமல் தனக்கென ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்.
அவரை பற்றி எக்கச்சக்க விமர்சனங்கள் வந்தாலும் எதைப்பற்றியும் கவலைப் படாமல் தனக்கு பிடித்ததை செய்து கொண்டிருப்பவர். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் அஜித். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: போட்ட காசை எடுப்பாரா லோகேஷ் கனகராஜ்?.. உறியடி விஜய் குமார் நடிப்பு எப்படி? ஃபைட் கிளப் விமர்சனம்!
அந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. சமீபத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்தப் படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் இணைய இருக்கிறார்.
அந்தப் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அஜித்தின் உண்மையான முகம் என்ன என சமீபத்தில் ஒரு இயக்குனர் கூறியிருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை. இயக்குனரும் நடிகருமான தயா செந்தில். தயா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அஜித்தின் சிட்டிசன் மற்றும் உன்னைக் கொடு என்னை தருவேன் போன்ற படங்களிலும் தயா செந்தில் பணிபுரிந்திருக்கிறாராம்.
இதையும் படிங்க: தளபதி 68ல் விஜய் இப்படி இருக்கணும்!.. வெங்கட் பிரபுவுக்கு பறந்த ஒரு பக்க கடிதம்!..
அவர் கூறும் போது இயக்குனர்களில் அகத்தியன் ஒரு மாதிரி கேரக்டர் என்றால் இந்தப் பக்கம் நடிகர்களில் அஜித் ஒரு மாதிரி கேரக்டர். அஜித் இப்படித்தான் என யாரும் அவ்வளவு எளிதாக சொல்ல முடியாது. மிகவும் எதார்த்தமாக இருப்பார்.
ஆனால் சில விஷயங்களில் அவர் எடுக்கிற முடிவுதான். ஊரே அவர் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும். ஆனால் அதை கட் பண்ணிவிட்டு காரை எடுத்துக் கொண்டு ரேஸ் என கிளம்பி விடுவார். இரண்டு வருடங்கள் இருக்க மாட்டார்.
இதையும் படிங்க: இசை சொல்லி கொடுத்த குருவிடமே சவால் விட்ட இசைஞானி!.. ராஜான்னா சும்மாவா!..
ஆனால் இதை பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. திரும்பி வரும் போது தனக்கான மார்கெட் இருக்குமா என்று கூட கவலைப்பட மாட்டார். ஆனால் ரசிகர்கள் அவரை தலையில் வச்சு கொண்டாடிக் கொண்டுதான் இருப்பார்கள். கூலான படம் எடுத்தாலும் ஓடி விடும். இது தான் அவருடைய பலம் என தயா செந்தில் கூறினார்.