அந்தப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த அஜித்! படமோ ப்ளாக் பஸ்டர் ஹிட்

Published on: January 17, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்கிறார்  நடிகர் அஜித். மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் இந்த நிலையை அடைந்திருக்கிறார் என்றால் அஜித் பட்ட வலிகள் ஏராளம். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவர்.

ரஜினி, கமல் இவர்களுக்கு அடுத்த படியான இடத்தில் அஜித் இருக்கிறார். ஒரு மாஸ் நடிகராக ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இந்த நிலையில் சமீபகாலமாக அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: அக்காக்கு முன்னாடி தங்கைக்கு கல்யாணமா? சாய் பல்லவி தங்கை வெளியிட்ட ஷாக் வீடியோ!…

அதுவும் விஜயகாந்த்  மறைவிற்கு பிறகு அஜித்தை கிழித்துக் கொண்டு வருகின்றனர். துபாயில் இருந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கூட வரமுடியவில்லையா? ஆனால் கும்மாளம் கொண்டாட்டம் இதெல்லாம் வேணுமா? என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் ஒரு மாபெரும் மனிதராக நல்ல நடிகராக இருந்தவர் விஜயகாந்த். அவருக்காக என்ன வேண்டுமானாலும் யோசிக்காமல் செய்ய வேண்டும். ஆனால் அஜித் வராததை இன்று வரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலிவுட்டுக்கு போனாலும் போனாங்க! எல்லாமே ஓப்பன்தான் – கண்ணாடி உடையில் மஜா காட்டும் ராஷ்மிகா

இதற்கிடையில் அஜித்தை பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவலை இயக்குனர் சரண் கூறினார். அமர்க்களம் படத்தில் நடிப்பதற்காக அதன் ப்ரடியூசர் அட்வான்ஸ் தொகையாக அஜித்திடம் செக் ஒன்றை கொடுத்தாராம். ஆனால் அஜித் அந்த செக்கை இதுவரை வங்கியில் கொடுத்து பணத்தை எடுக்க வில்லையாம்.

அதற்கு காரணம் காதல் மன்னன் சரணுக்கு பெரிய அடியாக அமைந்த படம். அதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஆனதாம். அதனால் அந்த நஷ்டத்தை ஈடுகட்டவே அந்த செக்கிலிருந்து பணத்தை அவர் இன்று வரை எடுக்க வில்லையாம். அதற்கு பதிலாக அமர்க்களம் படம் இரட்டை லாபம் பெற்றுக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்ரீலங்காவில் விஜயிற்கு காத்திருக்கும் ஆபத்து!…. பிரம்மாண்ட ஆசையில் மண்ணை போடும் வெங்கட் பிரபு!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.