ஸ்ரீலங்காவில் விஜயிற்கு காத்திருக்கும் ஆபத்து!.... பிரம்மாண்ட ஆசையில் மண்ணை போடும் வெங்கட் பிரபு!

Vijay: விஜய் தற்போது கோட் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். அதன் படப்பிடிப்பு தமிழர் வாழும் ஸ்ரீலங்காவில் நடந்து வரும் நிலையில் அது குறித்து தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் வின்னரான கில்மிஷாவை ஸ்ரீலங்கா அதிபர்கள் அழைத்து பாராட்டினர். ஆனால் அது மிகப்பெரிய சர்ச்சையானது. சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இப்போது எந்த பிரச்னையும் இல்லை என்பதை அது காட்டுவதாக இருந்தது.

இதையும் படிங்க: கேப்டன் மில்லரில் அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகர்கள்!.. சிவ்ராஜ்குமாருக்கு இத்தனை கோடியா?!..

அதுமாதிரி தமிழ் பிரபலங்களை ஸ்ரீலங்காவிற்குள் அழைத்து வந்து பொதுவெளியில் அவர்களுடன் இணக்கமாக இருக்கும் மாதிரி காட்டிக்கவும் அவர்கள் விரும்புகின்றனர். இது தான் தற்போது விஜயின் கோட் படத்திலும் நடந்து இருக்கிறது. முத்தையா முரளிதரனின் நெருங்கிய நண்பர் வெங்கட்பிரபு.

ஏற்கனவே தன்னுடைய ஒரு படத்தின் ஷூட்டிங்கை அவர் இலங்கையில் நடத்த ப்ளான் செய்து இருந்தார். அந்த விஷயம் வெளியில் கசிய பின்னர் ஏற்பட்ட சர்ச்சையால் அதில் இருந்து பின்வாங்கினார். தற்போது விஜயின் கோட்படத்தில் நடந்து இருக்கிறது.

இதையும் படிங்க: எந்த நடிகராலயும் முடியாத ஒன்னு! கேப்டனுக்காக சூர்யா செய்த செயலால் ஆடிப்போன இயக்குனர்

அப்படி மீறி அவர் செய்தால் அரசியலுக்குள் வந்த பின்னர் கூட அது வெளியாகலாம். இதில் விஜய் கவனமாக இருக்கவேண்டும். ஏற்கனவே இலங்கையை சேர்ந்த லைகா நிறுவனத்தால் விஜய் நிறைய அவதிப்பட்டுஇருக்கிறார். இந்த ஆபத்தில் இருந்து அவர் தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அந்தணன் அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

 

Related Articles

Next Story