எல்லாமே பொய்! அஜித்துக்கு அந்தளவுக்கெல்லாம் பெரிய மனசு இல்ல.. இப்படி ஆகிப் போச்சே
Ajith: தமிழ் சினிமாவில் விஜய் அஜித் என இருவரும் தொழில் முனையில் ஒரு சரியான போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி நட்பு பாராட்டி அன்றிலிருந்து இன்று வரை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள்.
இரு வீட்டார் குடும்பத்தாரும் வெளியே செல்வது ஒன்றாக தங்கள் நேரத்தை செலவழிப்பது என இன்று வரை அதே ஒரு பண்புடன் இருந்து வருகிறார்கள். விஜய் படத்திற்கு அஜித்தும் அஜித் படத்திற்கு விஜய்யும் மறைமுகமாக வாழ்த்து சொல்வதும் அடிக்கடி நடப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கோட் டிரெய்லர் பற்றி அஜித் தன்னிடம் சில விஷயங்களை பகிர்ந்தார் என வெங்கட் பிரபு பத்திரிக்கையாளர்களிடம் கூறியது அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய ட்ரீட்டாக அமைந்தது.
இதையும் படிங்க: உன் போட்டோவ விடிய விடிய பாக்கலாம்!.. இளசுகளை ஏங்க வைத்த பிரியா பவானி சங்கர்!..
கோட் டிரெய்லர் படத்தை பார்த்து அஜித் வெங்கட் பிரபுவிடம் ‘சூப்பரா இருக்குடா. விஜய்க்கும் கோட் பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடு’ என சொன்னதாக வெங்கட் பிரபு கூறினார். அது மட்டும் அல்லாமல் அஜித் நடித்த மங்காத்தா திரைப்படத்தை இயக்கியவரும் வெங்கட் பிரபு தான். அஜித்துக்கு அது ஐம்பதாவது படமாக ஒரு பக்கம் அமைந்தாலும் அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
ஒரு பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது. அதை வைத்து வெங்கட் பிரபுவிடம் அஜித் மங்காத்தா படத்தை போன்று 100 மடங்கு கோட் திரைப்படம் இருக்க வேண்டும் என சொன்னதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் ‘அஜித் இந்த அளவுக்கு சொன்னார் என சொன்னதெல்லாம் சுத்த பொய்.
இதையும் படிங்க: இந்த படம் ஓடுமா?!.. பயந்து போன இப்ராஹிம் ராவுத்தர்… கோபப்பட்ட விஜயகாந்த்….
அப்படி எந்த நடிகர்களும் மற்ற நடிகரின் படம் தன் படத்தை விட பெரிய அளவில் இருக்க வேண்டும் என யாருமே நினைக்க மாட்டார்கள். அந்த அளவு மனசு படைத்தவர்கள் யாரும் இந்த சினிமாவில் இல்லை’ என வலை பேச்சு அந்தணன் கூறினார். ஆனால் டிரெய்லரை பார்த்து அவர் சூப்பர் என சொன்னது உண்மையாக இருக்கலாம். ஏற்கனவே கங்குவா திரைப்படத்தின் டீசரை பார்த்து சிறுத்தை சிவாவிடம் அவருடைய மகிழ்ச்சியை தெரிவித்தார் அஜித் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.