நான் நடிகனாக காரணமே தல தான்… ரஜினி செய்யாததை செய்த அஜித்..! ராகவா லாரன்ஸ் சொன்ன ஆச்சரிய தகவல்..!

Raghava Lawrence: தன்னுடைய சினிமா பயணத்துக்கு காரணமே அஜித் தான். அவர் செய்த ஒரு விஷயத்தால் தான் நான் நடிக்கவே முடிந்தது என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய பேட்டி ஒன்றில் ஓபனாக சொல்லி இருக்கிறார்.

நடன இயக்குனராக தன்னுடைய பயணத்தினை ரஜினியின் மூலம் தான் தொடங்கினார் ராகவா லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் எடுப்பிடி வேலைகளை செய்து வந்து இருக்கிறார். அவர் மூலம் ரஜினி முன்னே ஆடும் வாய்ப்பு கிடைக்க பிச்சு உதறிவிடுகிறார்.

இதையும் படிங்க: எம்ஜிஆரிடம் அத கேட்டது தப்பா? அடுத்த நாளே படப்பிடிப்பில் இருந்து துரத்தப்பட்ட எஸ்.ஏ.சி

ரஜினியே அசந்து போய் தன்னுடைய சிபாரிசில் அவருக்கு நடன யூனியனில் கார்ட் வாங்கி கொடுத்து இருக்கிறார். அதில் இருந்து இருவருக்கும் அப்படி ஒரு பந்தம் இருந்து வருகிறது. எந்த வித முன் அனுமதியும் இல்லாமல் ரஜினியை பார்க்கும் 6 பேரில் லாரன்ஸும் ஒருவர்.

அதற்கு அடுத்தப்படியாக லாரன்ஸ் நடன இயக்குனராக வளர்ந்து வந்த காலம் அது. அப்போது அமர்க்களம் படத்தில் காலம் கலிகாலம் பாடலுக்கு முதலில் பாதிக்கு பாதி அஜித் ஆடுவது போல தான் கோரியோ செய்து இருக்கிறார்கள். ஆனால் லாரன்ஸின் டான்ஸை பார்த்தாராம் அஜித்.

இதையும் படிங்க: போர் அடிக்குது.. என்ன செய்யிறதுனு தெரியலை.. அதான் இதை செய்ய போறேன்.. மிஷ்கின் தடாலடி..!

அந்த பையன் ஆடுவதே நல்லா இருக்கு. அவரே முழு பாடலுக்குமே ஆடி விடட்டும் என்றாராம். பெரும்பாலும் பெரிய நடிகர்கள் தங்கள் படங்களுக்கு இன்னொருவருக்கு வாய்ப்பு அதிகமாக கொடுக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு ஒரு பாட்டையே கொடுத்தார். அதனால் தான் என்னால் நடிக்க முடிந்தது என்றார் லாரன்ஸ்.

சமீபத்தில் இனி நான் வருஷத்துக்கு 3 படம் செய்ய போகிறேன் என ஓபனாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அதையடித்து சந்திரமுகி2 ரிலீஸாகிய சில நாட்களில் ஜிகர்தண்டா2 தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. ரஜினியின் தலைவர்171ல் வில்லனாகவும் லாரன்ஸ்தான் நடிக்கலாம் என்ற தகவலும் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story