13 வருடங்களுக்கு பிறகு அஜித் செய்யப்போகும் மரண மாஸ் சம்பவம்.. விடாமுயற்சி அப்டேட்!

by muthu |   ( Updated:2023-05-30 00:59:51  )
13 வருடங்களுக்கு பிறகு அஜித் செய்யப்போகும் மரண மாஸ் சம்பவம்.. விடாமுயற்சி அப்டேட்!
X

விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்டான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார், நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் இமாலய வெற்றிக்கு பிறகு துணிவு படத்தில் நடித்து இருந்தார்.

பலத்த எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.



துணிவு படத்தினை அடுத்து அஜித், விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

ajith2



வரும் ஜூன் மாதம் முதல் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித், 13 வருடங்களுக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ajith

வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன், அட்டகாசம், பில்லா, அசல் ஆகிய படங்களில் அஜித் இரட்டை மற்றும் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அசல் படத்தில் தான் கடைசியாக அஜித் இரட்டை வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story