Connect with us

Cinema News

பைக் டூர் மட்டுமில்லை!.. நான் சைக்கிள் டூரும் போவேன்!.. க்யூட்டா சைக்கிள் ஓட்டிய அஜித் குமார்!..

நடிகர் அஜித் குமார் சென்னைக்கு திரும்பி உள்ள நிலையில், சைக்கிள் ஓட்டும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் பைக் டூர் செய்து வரும் நடிகர் அஜித் திடீரென சைக்கிள் ஓட்டிய காட்சியை பார்த்து ரசிகர்கள் தல டக்கர்டோய் என கொண்டாடி வருகின்றனர்.

மே மாதம் 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்டு இயக்குநர் மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்கப் போகிறார் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையும் படிங்க: எல்லாம் ஓகே! ரெண்டு மாசம்தான் – அடிச்சு தூள் கிளப்பப் போறாரு! ‘விடாமுயற்சி’க்கு கிடைத்த வெற்றி

ஆனால், அதன் பின்னரும் 3 மாத காலம் எந்தவொரு அப்டேட்டும் இல்லையே படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் ஆகும் என்கிற கேள்விகளை எல்லாம் தாண்டி, விடாமுயற்சி படத்தில் இருந்து லைகா நிறுவனம் வெளியேறுகிறது என்கிற வதந்தியே பரவ ஆரம்பித்தது.

சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம் குறித்து கேட்டதில், விரைவில் விடாமுயற்சி ஆரம்பமாகும் என அறிவித்து அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கினார்.

இதையும் படிங்க: விஜய், அஜித் படம் ஓடாது என நினைத்தேன்… ஆனா நடந்ததே வேற! ஆச்சர்ய தகவலை சொன்ன தேவா!

இந்நிலையில், அஜித் ரசிகர்களை மீண்டும் ஆன்லைனில் அதிரடியாக இணைக்க அஜித்தின் சைக்கிள் ஓட்டும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சென்னைக்கு திரும்பிய நடிகர் அஜித் தனது மகனின் பள்ளியில் சைக்கிள் ஓட்டியுள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே ஆத்விக் அஜித் பள்ளியில் நடிகர் அஜித் விளையாட்டு தினத்தன்று கலந்து கொண்டு சைக்கிள் டயரையே மகனுக்காக ஓட்டிய நிலையில், தற்போது சைக்கிள் ஓட்டியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விடாமுயற்சி படம் எத்தனை தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும், படம் வெளியாகும் போது நிச்சயம் இதுவரை வெளியான அஜித் படங்களை விட சிறப்பான தரமான சம்பவமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top