More
Categories: Cinema News latest news

அஜித் ஆரம்பித்த பைக் டூர் நிறுவனம்.. முதலீடு மட்டும் இம்புட்டு கோடியா?.. பார்ட்னர் இவங்களா? சூப்பர் தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் துவங்கி உள்ள புதிய நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் குமார் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த அஜித்குமாரின் அடுத்த கட்ட பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

அதில், “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது விடாமுயற்சி படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.” என சுரேஷ் சந்திரா ட்வீட் செய்திருந்தார்.

அஜித் நடிக்கும் அடுத்த விடாமுயற்சி படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்க உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித்,”ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)” என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை துவங்கி உள்ளார். 17.05.2023 அன்று இந்த நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் இருவரும் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிறுவனம் 20,00,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித்குமாரின் திருவான்மியூர் இல்லத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட உள்ளது.

Published by
muthu

Recent Posts