Categories: latest news

குட் பேட் அக்லி டீமுக்கு குட்பை!.. மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடும் அஜித்!.. என்னமோ நடக்குது!..

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது,

கடந்த ஆண்டு மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. கடந்த ஆண்டு இறுதியில் அஜர்பைஜானில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது அஜித் காரை ஒட்டிச் சென்று விபத்து செய்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பின்னர் சென்னை திரும்பிய படக்குழு மீண்டும் அஜர்பைஜானுக்கு போக முடியாத சூழலில் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: முதல் நாளிலேயே அடிவாங்கிய மோகன் படம்!.. ’ஹரா’ வசூல் இவ்வளவுதானா?.. அப்போ ’கோட்’ நிலைமை?

விடாமுயற்சி திரைப்படம் அவ்வளவு தான் எனக் கூறப்பட்ட நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க சென்று விட்டார். இந்நிலையில், அந்த படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை அஜித் தரப்பு சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், விடாமுயற்சி படத்தையும் எப்படியாவது முடித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அஜித் மற்றும் படக்குழுவினரிடம் சுமூக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அஜித் குமார் குட் பேட் அக்லி டீமுக்கு குட்டி குட்பை சொல்லி விட்டு மீண்டும் விடாமுயற்சி படத்தில் நடிக்க வரும் ஜூன் 20ம் தேதி அஜர்பைஜானுக்கு சென்றடைந்து விடுவார் என்கின்றனர்.

இதையும் படிங்க: சூரியுடன் எஸ்.கே.வுக்கு இப்படி ஒரு கூட்டா!… சைலண்டா எல்லா வேலையும் பாக்குறாங்க!…

கடந்த ஆறு மாதங்களாக கஷ்டத்தில் இருந்த மகிழ் திருமேனி அசுர வேகத்தில் விடாமுயற்சி ஒரே மூச்சில் 30 நாட்களுக்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளாராம். ஆனால், ஆதிக் ரவிச்சந்திரனுக்குத் தான் தற்போது அடி வயிறு கலங்குவதாக கூறுகின்றனர். பொங்கல் ரிலீஸ் என அறிவித்த நிலையில், அஜித் சீக்கிரம் வருவாரா? திட்டமிட்டப்படி முடிக்க முடியுமா என குழம்பி வருவதாக கூறுகின்றனர்.

Saranya M

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

45 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

14 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

16 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago