விஜய்யோட ஹீரோயினை மட்டுமில்லை!... வில்லனையும் ஆட்டைய போட்ட அஜித்!.. லேட்டஸ்ட் போட்டோவ பாருங்க!..

லியோ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்துள்ள நடிகை திரிஷா தான் அடுத்ததாக அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் ஹீரோயின் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் வில்லனுடன் நடிகர் அஜித்குமார் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக துபாயில் நடிகர் அஜித் அனைத்து ஏற்பாடுகளையும் கூறுவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இடுப்பாட்டும் இலவம் பஞ்சு காடு!.. இந்த காட்டு காட்டுறேரே அன்லிமிடட் அந்தரங்கம் ரேஷ்மா பசுபுலேட்டி!..

இந்நிலையில் துபாயில் இருந்து நடிகர் அஜித் மற்றும் லியோ வில்லனின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விடாமுயற்சி மூலம் விட்டு இடத்தை எப்படியாவது மீண்டும் பிடிக்க வேண்டும் என்கிற தீவிரமான முயற்சியில் நடிகர் அஜித் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே இந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவனை தூக்கி அடித்திருந்தார். பக்காவான ஆக்சன் படமாக விடாமுயற்சி உருவாகியுள்ள நிலையில், அதற்கு ஏற்ற மாதிரி வில்லனும் வெயிட்டாக வேண்டுமே என நினைத்த அஜித் நண்பர் விஜயின் வில்லனையே இந்த படத்தில் புக் செய்து விடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா இவர தூக்கி சாப்பிட்ருவாங்க!.. சூதானமா இருக்கணும் சூரி..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் நடித்தாலும் மெயின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆண்டனி தாஸ் எனும் கதாபாத்திரத்தில் மிரட்ட காத்திருக்கும் சஞ்சய் தத் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் வெறித்தனத்தை காட்டுவார் என தெரிகிறது.

நடிகர் அஜித்துடன் பிரபல பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். மே 1-ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், அந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக திரிஷா மற்றும் ஹுமா குரேஷி நடிக்க உள்ளதாகவும் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ளன.

சஞ்சய் தத் மட்டுமின்றி மேலும் சில மிரட்டல் வில்லன்கள் லியோ படத்தைப்போலவே விடாமுயற்சியிலும் இணைவார்கள் எனத் தெரிகிறது.

 

Related Articles

Next Story