ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி!.. அடுத்த ஹைப்பை ஆரம்பிச்சிட்டானுங்க.. விவேகம் 2 மாதிரி வராமா இருந்தா சரி!..

by Saranya M |   ( Updated:2023-10-22 08:10:47  )
ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி!.. அடுத்த ஹைப்பை ஆரம்பிச்சிட்டானுங்க.. விவேகம் 2 மாதிரி வராமா இருந்தா சரி!..
X

முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸுக்கு முன்பு வரை இதுவரை இந்திய சினிமாவே பார்த்திராத படமாக வரப்போகுது ஹைனா வருது, அனகொண்டா வருது என உருட்டி விட்டு கடைசியில் பிம்பிளிக்கா பிளாப்பி என தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர்.

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், எடுபடாமல் போய் விட்டன.

இதையும் படிங்க: அஜித்கிட்ட பிடிச்ச விஷயம்! பல பேட்டிகளில் மறைக்காமல் விஜய் சொன்ன நச் பதில் – சரியாத்தான் சொல்லிருக்காரு

இந்நிலையில், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி ஆரம்பமாகமே ஆறு மாசம் ஆன நிலையில், அஜர்பைஜானிலேயே மொத்த படத்தையும் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கி வருவதாக உருட்டி வருகின்றனர்.

காஷ்மீர், அஜர்பைஜான் என ஷூட்டிங்கிற்கு போவதும் ஏகப்பட்ட பில்டப்புகளும் கொடுப்பதுமாக இருந்து விட்டு கடைசியில் படம் வரும் போது அதற்கான அவுட்புட் இல்லாமல் போவதால் ரசிகர்கள் தொடர்ந்து முதல் நாளே அதிக பணம் கொடுத்து பார்த்து ஏமாந்து போகும் நிலை தொடர்ந்து வருவதால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

இதையும் படிங்க: ராதிகாவால் ராதாவுக்கு கிடைக்காம போன தேசிய விருது!.. உயிர குடுத்து நடிச்சும் வீணாப்போச்சே!…

இயக்குநர் மகிழ் திருமேனி தடம் போல அருமையான படத்தை நடிகர் அஜித்துக்கு தாறுமாறாக கொடுத்து மீண்டும் ஒரு கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம். ஆனால், ஒட்டுமொத்த படமும் அஜர்பைஜானில் ஷூட் செய்யப்பட்டால் தமிழ் ஆடியன்ஸை கனெக்ட் செய்யாமல் விவேகம் 2 போல வந்து விடாமல் இருந்தால் சரி என ஃபீல் செய்து வருகின்றனர்.

Next Story