அவர பார்த்து மிரண்டுட்டேன்.. அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்!. அஜித்தே பாராட்டிய நடிகர்…

Published on: December 4, 2023
ajith
---Advertisement---

Ajith kumar:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்கள் இவரை தல என செல்லமாக அழைக்கிறார்கள். ஆனால், என்னை அப்படி கூப்பிட வேண்டாம். ஏகே என அழையுங்கள் என கூறினார். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அசர் பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன் என பலரும் நடித்து வருகிறார்கள். இப்போது் ஹீரோவாக மட்டுமே நடிக்கும் அஜித் 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் மற்ற ஹீரோக்களிடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் நடிக்க வேண்டிய மாஸ் கதை!.. சியான் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்.. அட அந்த படமா?…

விக்ரம், பார்த்திபன், கார்த்திக், விஜய் என பலருடனும் நடித்திருக்கிறார். ஆனால், கடந்த பல வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். ஷாருக்கானின் நடிப்பில் உருவாகி 2001ம் வருடம் வெளிவந்த திரைப்படம் அசோகா. இந்த திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்த படம் ஹிந்தி மற்றும் தமிழில் வெளியானது.

இந்த படத்தில் அஜித் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். நீங்கள் ஏன் ஷாருக்கான் நடித்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தீர்கள்? என அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அஜித் சொன்ன பதில் இதுதான். வாலி படம் முடிந்ததும் சந்தோஷ் சிவன் இந்த கதையை என்னிடம் சொல்லி ஒரு சிறிய வேடத்தில் நடிக்க சொன்னார். அந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது.

இதையும் படிங்க: பாபுவின் மகளாக இருந்த ஷாலினி… அஜித்தின் மனைவியான கதை.. எப்படி நடந்தது இந்த மேஜிக்..?

அதோடு, ஷாருக்கானை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கும் என நினைத்தேன். அதேநேரம், அந்த படத்தில் அனுபவத்தை தாண்டி ஷாருக்கானிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் எவ்வளவு பெரிய ஸ்டார். ஆனால், படப்பிடிபு தளத்தில் அவரின் காட்சி முடிந்தாலும் மற்ற வேலைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருப்பார்.

அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் சுறுசுறுப்பாக இருப்பதால் மொத்த யூனிட்டுமே சுறுசுறுப்பாக இயங்கும். இந்த விஷயத்தை நான் அவரிடமிருந்து கற்றுகொண்டேன்’ என அஜித் சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: அஜித்துக்கு நடிப்பில் டெடிகேஷனே இல்லை.. சூர்யா ஃபீல்ட் அவுட் நடிகர்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.