ஒரு வேளை ஷாலினியா கூட இருக்கலாம்!.. அஜித்தின் திடீர்மாற்றத்தை பற்றி பேசிய பிரபல நடிகர்..

இன்று தமிழக ரசிகர்களால் கொண்டாடப்படக் கூடிய நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். அவரின் எல்லையில்லா வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஆசை படத்தில் 25000 ரூபாய் சம்பளமாக பெற்ற அஜித் இன்று 100 கோடி வரை சம்பளம் பெறுவதை அனைவரும் பிரமிப்பதான் பார்க்கிறார்கள்.

ajith1

ajith1

அந்த அளவுக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை வாய்ந்த நடிகராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் எப்படி இருந்தாரோ அதே அளவுக்கு தான் இப்பொழுதும் இருக்கிறார் என்று பல பிரபலங்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நடிகரும் உதவி இயக்குனருமான மாரிமுத்து என்பவர் அஜித்தை ஆரம்ப காலங்களில் இருந்தே கவனித்து வருகிறாராம்.

அதாவது ஆசை படத்தில் இருந்தே அஜித்தை அவருக்கு தெரியுமாம். சில சமயங்களில் அஜித்தை இவர் தான் பைக்கில் ஏற்றிக் கொண்டு செல்வாராம். மேலும் அஜித்தும் பைக்கில் வந்து இவரை அழைத்துக் கொண்டு செல்வாராம், ஆசை படத்தில் 25000 ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அதை தனக்காக வைத்துக் கொள்ளமாட்டாராம்.

ajith2

ajith shalini

மற்றவர்களுக்காக செலவிடும் நபராகத் தான் இருப்பாராம். அந்த குணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆனால் சமீப காலங்களில் அது மாறியிருக்கிறது என்றால் ஒரு வேளை ஷாலினி வந்த பிறகு கூட மாறியிருக்கலாம் என்றும் கூறினாராம்.

இதையும் படிங்க : ‘ஜெய்லர்’ படத்தில் கேமியோ ரோலில் மற்றுமொரு சூப்பர் ஸ்டாரா?.. தலைவர் பக்கா ப்ளானோடு தான் இருக்காரு!..

எப்பொழுதும் தான் வாங்கக் கூடிய சம்பளத்தை அவருக்காக வைத்துக் கொண்டதே இல்லையாம். மிகவும் பெருந்தன்மையாகவும் இருக்கக் கூடியவர் என்றும் யாரிடமும் எளிதாக பழகக் கூடியவர் என்றும் கூறினார். அவர் கூறியது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும் இப்பொழுது வரை பல பேருக்கு தெரியாமல் பல நல்ல உதவிகளை செய்து வருகிறார் என்றும் பல தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

ajith3

marimuthu

 

Related Articles

Next Story