Categories: latest news

லைக்கா மீது அஜித்துக்கு கோவமா? ‘ஏகே 63’ பட போஸ்டர் வெளியிட்டதன் பின்னனி காரணம் இதுதானா?

Ajith: நேற்று அதிரிபுதிரியாக வெளியானது அஜித்தின் ஏகே 63 படத்தின் போஸ்டர். படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்ரேயி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. படத்தின் போஸ்டருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டனர்.

பொங்கல் அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்து. இந்த நிலையில் குட் பேட் அக்லி படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். அதாவது கத்தி மேல் நடப்பது மாதிரியான ஒரு சூழ்நிலையில் தான் இருக்கிறார் ஆதிக். ஏனெனில் லோகேஷ் மாதிரியே போஸ்டருடன் பட ரிலீஸ் தேதியையும் அறிவித்ததுதான் இவருக்கு இருக்கும் சவால்.

இதையும் படிங்க:குட் பேட் அக்லி!.. அப்பவே இதுக்கு யாரு செட்டாவான்னு ஜோசியம் பார்த்த வெங்கட் பிரபு!.. எப்படி பாஸ்!..

இதனாலேயேதான் விஜயின் லியோ படம் சுமாரான விமர்சனத்தை பெற்றது. இப்போது அஜித் படமும் அந்த மாதிரியான சூழ் நிலையில்தான் இருக்கிறது. இருப்பினும் ஆதிக் அதை திறம்பட கையாள வேண்டும் என செய்யாறு பாலு கூறினார். மேலும் இந்தப் படம் முழுவதும் ஜப்பானில் தான் படமாக்கப்பட இருக்கிறதாம். இப்படியெல்லாம் தகவல்கள் வெளிவர விடாமுயற்சி படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வரவில்லையே என செய்யாறு பாலுவிடம் கேட்டபோது சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

மகிழ்திருமேனிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு சின்ன க்ளாஷ் போவதாக கூறப்படுகிறதாம். அவர்களுக்குள் மட்டுமல்லாமல் அஜித், லைக்கா, மகிழ்திருமேனி இந்த மூவருக்குமிடையே ஏதோ ஒரு பிரச்சினை போய்க்கொண்டிருப்பதாக செய்யாறு பாலு கூறினார். அதனால்தான் லைக்கா மீதுள்ள கோபத்தால் கூட இந்தப் படத்தின் போஸ்டர் வெளியிட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறதாம்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் பூங்குழலியா இது!.. பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டாங்களே.. ஜூம் பண்ணும் பாய்ஸ்!

லியோ படத்தின் போது வெங்கட் பிரபு படம் சம்பந்தமாக எந்தவொரு அப்டேட்டும் வரக் கூடாது என விஜய் அதில் கவனமாக இருந்தார். ஏன் வெங்கட் பிரபுவை அழைத்துக் கூட கண்டித்தார். அதற்கு காரணம் ப்ரடக்‌ஷனில் இருக்கும் படம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகத்தான். ஆனால் அஜித் விடாமுயற்சி படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்த நிலையில் திடீரென அடுத்தப் பட போஸ்டரை அறிவிப்பதற்கு சம்மதம் கொடுத்திருக்கிறார் என்றால் உள்ளுக்குள் ஏதோ பிரச்சினை போய்க் கொண்டிருக்கிறது என செய்யாறு பாலு கூறினார்.

Rohini

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

33 minutes ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

3 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

3 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

5 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

8 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

20 hours ago