தளபதி மட்டும்தான் மோட்டிவேட் பண்ணுவாரா? ‘தல’ யும் தான் - மார்க் ஆண்டனிக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?

ajith
Actor Ajith: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் படம் மார்க் ஆண்டனி. விநாயகர் சதுர்த்தி அன்று படம் ரிலீஸ் ஆக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஷால் கோயில் கோயிலாக நேத்திக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே த்ரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அந்த இரு படங்களுமே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: எனக்கு என்னமோ ஆகப்போகுது!.. கெட்டது நடக்கபோகுது!.. அப்போதே கணித்த மாரிமுத்து!.. வீடியோ பாருங்க….
இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை என்றாலும் இந்த ஒரு பெரிய கூட்டணியை வைத்து எந்த தைரியத்தில் மீண்டும் களத்திற்குள் இறங்கியிருக்கிறார் என்று விசாரித்தால் அதற்கு பின்னனியில் இருந்து தூண்டுகோலாக இருந்தது அஜித்தான் என்று தெரியவந்தது.
ஜெய்லர் படம் எனக்கு கிடைத்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது தளபதிதான் என்று நெல்சன் ஒரு பக்கம், ஜவான் படத்தின் வாய்ப்பு தளபதி அண்ணனாலதான் எனக்கு கிடைத்தது என்று அட்லீ ஒருபக்கம் விஜயையே புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: இடுப்புக்கு மேல பிரச்னை… ஜோதிடர் சொன்னது பழித்ததா… மாரிமுத்து மறைவால் அதிர்ச்சியில் திரையுலகம்!
அதற்கு மத்தியில் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது அஜித் சாராலதான் என மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார். பக்கா அஜித் வெறியனான ஆதிக் ரவிச்சந்திரன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் போது அஜித்துடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததாம்.
அப்போது அஜித் ஆதிக்கிடம் ‘எப்பவுமே சின்ன பொருளுக்கு ஆசைப்படக் கூடாது என்றும் பெரிய பொருள் மீதுதான் ஆசை அதிகமாக இருக்க வேண்டும்’ என்று கூறினாராம். அப்போது வரைக்கும் கிடைக்கிற வாய்ப்பை வைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்வோம் என்றுதான் ஆதிக் இருந்தாராம்.
இதையும் படிங்க: போன மாசம் வந்த படத்தை கூடவா காப்பி அடிப்பீங்க..அட்லியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..
அஜித்தின் இந்த அறிவுரைக்கு பிறகு ஆதிக்கின் மனதில் ஏதோ ஒன்று துளைத்துக் கொண்டே இருக்க பெருசா எதாவது பண்ண வேண்டும் என்ற ஆசை பிறந்ததாம். அதன் விளைவுதான் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம். இந்தப் படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் அதன் முழு கிரெடிட் அஜித் சாருக்குத்தான் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார்.