அஜித்துக்கு முதல் படமாக அமைந்தது என் வீடு என் கணவர் எனும் படம் தான் ஆனால், அதில் அவர் கதாநாயகன் அல்ல குணச்சித்திர கதாபாத்திரம் தான். அதன் பின்னர் தான் பிரேம புஸ்தகம் எனும் படத்தின் நாயகனாக மாறினார். ஆனால் அதில் ஏகப்பட்ட தடங்கல், இயக்குனர் இறந்த பின், அந்த இயக்குனரின் தந்தை படத்தை முடித்து அப்படத்தை காப்பாற்றினார்.
அதன் பின்னர் அஜித்தை ராசியில்லாத நடிகர் என தமிழ் சினிமா ஒதுக்க நினைத்த சமயத்தில், அவருக்கு கை கொடுத்த திரைப்படம் தான் அமராவதி. இந்த படத்தை சோழா பொன்னுரங்கம் என்பவர் தயாரிக்க இயக்குனர் செல்வா இந்த படத்தை இயக்கினார்.
அதன் பின்னர் இயக்குனர் செல்வா கர்ணா, புதையல், ஆசையில் ஓர் கடிதம், ஜோர், நான் அவன் இல்லை என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அஜித்தின் வளர்ச்சி நல்ல நிலையில் இருந்த சமயம், மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை கிரீடம் எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யும் வேலை நடந்து வந்தது.
இதையும் படியுங்களேன் – விஜய் அம்மாவின் வித்தியாசமான ‘அந்த’ ஆசை.! தளபதி மனசு வைத்தால் நிச்சயம் நடக்கும்.!
அதில் அஜித் ஹீரோ என முடிவான பிறகு, அப்படத்தை யார் இயக்குவார் என்ற நிலை வந்த போது, இயக்குனர் செல்வாவின் பெயரும் அடிபட்டது. ஆனால் எனோ சில காரணங்களால் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் செல்வா இழந்துவிட்டார். அதன் பிறகு தான் அப்போது புது முக இயக்குனராக ஏ.எல்.விஜய் தமிழ் சினிமாவில் கிரீடம் படம் மூலம் களமிறங்கினார்.
தன் முதல் பட இயக்குநருக்கே அஜித் வாய்ப்பு தரவில்லை என பேச்சு எழுத்தாலும், இது அவர் மட்டும் முடிவு செய்ய வேண்டிய நிலையில் யில்லை. படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் முடிவு, அதே போல இயக்குனர் செல்வா போன்ற கமர்சியல் இயக்குனருக்கு கிரீடம் போன்ற படத்தை சரியாக எடுத்துவிடுவார்களா என்கிற அச்சம் இருந்திருக்கலாம் . அதனால் கூட அந்த வாய்ப்பு அவரை விட்டு நழுவி இருக்கலாம். எது எப்படியோ, படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை.
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…