'ஆப்பு கண்ணுக்குத் தெரியாதுடீ'னு விஜய் பேசுற மாதிரியே டயலாக் வேணும்... அடம் பிடித்த அஜித்
விஜய் படத்தில் பேசியது போலவே தனக்கும் பஞ்ச் டயலாக் வேண்டும் என அஜித் தெரிவித்ததாக தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
கமர்ஷியல் படங்களில் 20களின் துவக்கத்தில் அதிக ஆர்வம் காட்டியவர் தளபதி விஜய். பெருவாரியாக அம்மா, தங்கை செண்டிமெண்ட் படங்களே அதிகமாக செய்தார். விஜய்யை வைத்து ரெண்டு படங்கள் செய்தவர் இயக்குனர் பேரரசு. கிராமத்து கான்செப்டில் இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது.
விஜய் படங்களை தொடர்ந்து அஜித்திற்கும் பேரரசு ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறார். ஏ.வி.எம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான படம் தான் திருப்பதி. இப்படத்திற்கு தனக்கு பேரரசு தான் வேண்டும் என அஜித்தே கேட்டு வாங்கினாராம்.
தனது படத்தின் கதையை அஜித்திற்கு சொல்ல கால் செய்தாராம் பேரரசு. படத்தின் பெயர் திருப்பதி என அஜித்திடம் கூறியதும் அவர் தரப்பில் ஒரே அமைதி. என்னடா ஒருவேளை பிடிக்கலையோ என யோசித்திருக்கிறார். அப்போ அஜித், 'சார், இப்போதான் திருப்பதி கோயில்ல தரிசனம் முடிச்சிட்டு கீழே வந்துட்டு இருக்கேன்’ என கூறி இருக்கிறார். இதனால் படத்தில் இருவரும் மிக மிகழ்ச்சியுடன் துவங்கி இருக்கின்றனர்.
முதல் இரண்டு சந்திப்பிலும் பேரரசு கதை சொல்ல ஆர்வம் காட்டிய போதும் அஜித் அதை கேட்கவே இல்லையாம். மூன்றாவது சந்திப்பில் படத்தின் கதையை கேட்டவர். சொன்ன ஒரே பதில் 'ஆப்பு கண்ணுக்குத் தெரியாதுடீ'னு விஜய் பேசுற மாதிரியே நம்ம படத்துலயும் வெச்சிருங்க' என்பது தானாம்.