Ajith Vijay: இன்று கோலிவுட்டில் ஒரு பெரிய ஆளுமை உள்ள நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்தபடியான நிலையில் அஜித்தும் விஜயும் தான் இருக்கிறார்கள்.
இருவருக்குமே லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அஜித் விஜய் படங்கள் ரிலீசாகும் சமயத்தில் அவர்களுடைய பவர் என்ன என்பது அப்போது தான் தெரியும். முண்டியடித்துக் கொண்டு அவர்கள் படத்தை ரசிகர்கள் பார்க்க வருவதை காணும் போது மற்ற மொழி சினிமா நடிகர்களுக்கே ஒரு பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: ஜோதிகா வொர்க் அவுட் மட்டும்தான பாத்தீங்க! இடுப்பழகி இளமையின் ரகசியத்தை பாருங்க
அந்த அளவுக்கு இவர்களின் பலம் தமிழ் சினிமாவில் ஓங்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இருவருமே ஆரம்ப காலங்களில் ஒரே நேரத்தில் சினிமாவிற்குள் வந்தவர்கள் தான். ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
அதன் பிறகு இரண்டு பேரும் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. தனக்கென தனி மார்கெட்டை வைத்துக்கொண்டு ஒரு தொழில் முனை போட்டியாளர்களாக இருவரும் இன்றுவரை பயணித்து வருகிறார்கள். ஆனால் தொழிலில் போட்டியிருந்தாலும் நிஜத்தில் இருவருமே நட்பு பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: எனக்கு பிடிக்காத நடிகை லைலா.. இரிடேட்டிங் கேரக்டர்! அடுத்த ஆப்பு ரெடி ஷ்யாமுக்கு
இவர்கள் மட்டுமல்ல இவர்களைச் சார்ந்த குடும்பமும் ஒருவருக்கொருவர் நட்போடு பழகி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் த. பாண்டியன் விஜய் அஜித்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது விஜய்யும் அவருடைய அப்பா சந்திரசேகரும் சேர்ந்து ரசிகர்களை தூண்டிவிட்டு அஜித்தின் படங்களை கேலி செய்வதும் கிண்டல் செய்வதும் என இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபட்டிருக்கின்றனர் என தெரிவித்தார்.
ஆனால் அஜித் ஒருபோதும் அந்த மாதிரி செய்ததே இல்லை. அப்படிப்பட்டவரும் அஜித் கிடையாது. எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்தவர் அஜித். அவருடைய வேலையை சரியாக செய்து விட்டு போகக் கூடியவர். விஜய்யும் அவரது தந்தையும் செய்த மாதிரி ஒருபோதும் அஜித் யாருடைய குடியையும் கெடுத்ததில்லை என்பது போல ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: லோகேஷுக்கு வந்த அதே பிரச்சனைதான் வெங்கட் பிரபுவுக்கும்!.. பாவம் திட்டு வாங்குறாரு!..
