Actor Ajith: அஜித் இப்போது குட் பேட் அக்லி படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களாக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே அஜித் நடித்து பாதியிலேயே நிற்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பையும் ஒரு பக்கம் மீண்டும் ஆரம்பிக்கலாம் என அஜித் கருதுவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதனால் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்தாலும் ஓய்வு நேரம் கிடைக்கும் போது விடாமுயற்சி படத்தையும் முடித்து விடலாம் என்ற எண்ணத்திலும் அஜித் இருக்கிறார். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு அஜித் அடுத்ததாக எந்த இயக்கனருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகின்றன. ஏற்கனவே கங்குவா திரைப்படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை பார்த்த அஜித் அதில் பிரமித்து போய் அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் பேசியதாக ஒரு தகவல் வெளியானது.
இதையும் படிங்க: சாய் பாபா கோயில்னா ஓகே.. காஞ்சிபுரம் கோயிலில் கூடாதா?.. திடீரென சவுண்டு சரோஜாவாக மாறிய விஜய் அம்மா?
அது உண்மையான தகவல்தான் என பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறி இருக்கிறார். உண்மையிலேயே கங்குவா படத்தின் அந்த க்ளிம்ப்ஸை அஜித் பார்த்ததாகவும் உடனே சிறுத்தை சிவாவிற்கு ஃபோன் செய்து மனதார பாராட்டியதாகவும் அருகில் இருந்து அதை நானே பார்த்தேன் என்றும் தனஞ்செயன் கூறினார். அஜித் போன் செய்ததும் சிறுத்தை சிவாவுக்கு ஒரே மகிழ்ச்சியாம். அஜித் சாரே பாராட்டிட்டாரு என சொல்லி அனைவரிடமும் அவருடைய மகிழ்ச்சியை பகிர்ந்தாராம்.
அதிலிருந்து சிறுத்தை சிவாவும் அஜித்தும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தனஞ்செயன் கூறினார். அதனால் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு வேறு எந்த இயக்குனர்களும் இதுவரை அஜித்தின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகாததால் ஒருவேளை சிறுத்தை சிவா அவருடைய படத்தை இயக்கலாம் என தனஞ்செயன் கூறினார்.
இதையும் படிங்க: கேப்டன் குடும்பம் போட்ட கண்டீசன்! உஷாரான விஜய்.. பதறி ஓடிய விஜய் ஆண்டனி
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து நான்கு ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றனர். அடுத்ததாக ஐந்தாவது படமும் ஹிட் அடித்தால் இது ஒரு மாபெரும் சாதனையாகும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அஜித்தை எந்தெந்த ஆங்கிளில் எப்படி காண்பித்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை நன்கு அறிந்தவர் சிறுத்தை சிவா. அதனால் அடுத்த படம் சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு தகவல் போய்க்கொண்டிருக்கின்றது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…