ரஜினியை முந்திய அஜித்.!? பட்டாசு போட்டு ஒரே கொண்டாட்டம்தான்!..
நேற்று மாலை ஓர் அறிவுப்பு வந்தது வந்தவுடன் இணையத்தில் ஒரே கொண்டாட்டம் தான். ஆனால், அந்த செய்தி அதற்கு சில நாட்கள் முன்னரே இணையத்தில் வெளியாகி விட்டது. ஆம் அஜித் , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்கிற செய்திதான் அது.
அஜித் முதன் முறையாக லைகா நிறுவனத்திற்கு படம் நடிக்க சம்மதித்துள்ளார். இதில் அஜித் ரசிகர்களுக்கு எவ்வளவு தூரம் சந்தோஷமோ, அதே அளவு சந்தோசம் லைகா நிறுவனத்தில் உள்ளவர்களுக்கும் இருந்ததாம்.
அஜித் படம் கமிட் ஆகி அந்த அறிவிப்பு வெளியானதும், லைகா நிறுவனத்தில் பட்டாசு வெடித்து ஊழியர்கள் கொண்டாடினராம். இதற்கு முன்னர் எந்த ஹீரோ பட அறிவிப்புக்கும் லைகா நிறுவனத்தில் இந்த மாதிரியான பட்டாசு வெடித்து கொண்டாட்டம் செய்தது இல்லையாம்.
இதையும் படியுங்களேன் - சூர்யா குடும்பத்தை காப்பி அடிக்கும் சியான் விக்ரம்.! அடுத்தடுத்து பொழப்ப பாக்கணும்னா இத செஞ்சுதான் ஆகணும்.!
இதற்கு முன்னர் லைகா நிறுவனம் ரஜினியை வைத்து 2.O மற்றும் தர்பார் என இரு படங்களை தயாரித்துள்ளது. அப்போது கூட இந்த கொண்டாட்டம் இல்லையாம். அதே போல விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்து தான் முதன் முறையாக லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் கால்பதித்தது குறிப்பிடத்தக்கது. கத்தி படம் அவர்களுக்கு புதுசுமுதல் படம், ஆனால், 2 ரஜினி படத்திற்கு இல்லாத கொண்டாட்டம் லைகா நிறுவனத்திடம் தற்போது இருந்தது ஏன் என தெரியவில்லை.