அஜித்தின் அடுத்த மெகா பட்ஜெட் படம்… 500 கோடியா? டைரக்டர் யாரு?

by sankaran v |   ( Updated:2025-05-05 06:06:31  )
AJith
X

AJith

Ajithkumar: குட் பேட் அக்லி படம் அஜித்துக்கு பெரிய அளவில் வசூலைக் கொடுத்த படம். ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் ஃபேன் பாய் படமாக உருவானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் எதுன்னு ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அடுத்ததாக துபாயில் இருந்து அஜித் வந்ததும் ஒரு தகவல் வெளியானது. தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்றும் சொன்னார்கள். அதே போல பில்லா படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்த்தனுக்கும் வாய்ப்பு கொடுக்கப் போகிறார் என்றார்கள். அதே போல குட்பேட் அக்லி கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் படத்தை இயக்கப் போகிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

அடுத்ததாக ரசிகர்களும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அடுத்தப் படத்தை இயக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ரசிகர்களின் கொண்டாட்டம் அஜித்தை ரொம்பவே ஆச்சரியப்படுத்தி வருகிறது. ரசிகர்களை 'அஜீத்தே கடவுளே' கோஷம் எல்லாம் வேண்டாம். 'ஏகே, அஜித்குமார்' போதும் என்றும் அட்வைஸ் பண்ணி இருக்கிறார். இது அஜித்துக்கு ரொம்பவே உற்சாகம் கொடுத்துள்ளது. பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார். கோட் சூட்ல தான் எங்கு போனாலும் ராயல் லுக்கில் தான் அஜித் வருகிறார். நேரு ஸ்டேடியத்துக்கும் கூட அப்படித்தான் கிரிக்கெட் பார்க்க வந்தார்.

#image_title

அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு அஜித் சிறப்பா ஏதாவது பண்ணலாம்னு நினைக்கிறாரு. அடுத்த படத்தை மைத்ரி மூவீ மேக்கர்ஸ்தான் பண்ணப் போறாங்க. ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குனர் என்பதும் 90 பர்சன்ட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது. தயாரிப்பு நிறுவனமே ஆசைப்பட்டு இந்தப் படத்தை தயாரிக்க வருகிறாராம். அந்த வகையில் இந்தப் படம் 500 கோடியில் உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Next Story