அஜித்திடம் அந்த மாதிரி விஷயம்லாம் அனுமதியே இல்லையாம்! இப்படியும் ஒரு நடிகரா? சர்டிஃபிக்கேட் கொடுத்த தங்கத்தலைவி

Published on: October 11, 2023
ajith
---Advertisement---

Ajitth: தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் நடிகர் அஜித். அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அவருடைய சொந்தப் பெயரையே மறக்கும் அளவுக்கு செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இன்று இந்தளவு உயரத்தை அஜித் அடைந்திருக்கிறார் என்றால் அதற்கு பின்னனியில் அவர் பட்ட வேதனைகளும் பல போராட்டங்களும் தான் காரணம், எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் வந்து தன்  கடின உழைப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து ஒரு உச்சத்தை அடைந்திருப்பவர் அஜித்.

இதையும் படிங்க: வேலியில போற ஓணான இழுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையால இருக்கு… சும்மா இருந்த நெக்சனை வம்புக்கு இழுத்த பிரதீப்!…

அவர் மீடியா பக்கம் வந்ததே அவருடைய லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகத்தான். நடிப்பை விட பைக், கார் பந்தயங்களில் கலந்து கொள்வதைத்தான் அதிகமாக விரும்புகிறார். அதனால்தான் ஆரம்பகாலங்களில் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பணம் தேவைப்பட்டதால்தான் விளம்பரப் படங்களில்  நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

விளம்பரப் படங்களில் இருந்து தெலுங்கு, தமிழ் என இன்று ஒரு மாபெரும் ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார். இன்னும் ஒரு சில வருடங்களுக்கு பிறகு அவருடைய சொந்தப் பிசினஸில்தான் அஜித் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: எனக்கு தான் வேணும்… தொடர்ந்து அடம் பிடிக்கும் கணேஷ் மற்றும் மாலினி…!

சமீபத்தில் வீனஸ் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். அதன் மூலம் பைக் பயணம் மேற்கொள்ள ஆசைப்படும் நபர்களின் பாதுகாப்பு. அக்கறை , தனிக்கவனம் என இந்த நிறுவனத்தின் மூலம் அஜித் கொடுப்பதாக அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சினிமாவிற்கு பதிலாக முழு நேர வேலையாக அதில்தான் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அஜித்தை பற்றி அளித்த ஒரு பழைய பேட்டி ஒன்று வைரலாகின்றது.

இதையும் படிங்க: லியோ கிளைமேக்ஸ்ல ராஜமெளலி ஹீரோவா?.. லோகேஷ் கனகராஜ் இறங்கி செய்ய ஆரம்பிச்சிட்டாரா?..

அந்த வீடியோவில் அட்ஜெஸ்ட்மெண்ட், நடிகைகள் படும் வேதனை போன்றவைகளை பற்றி பேசியிருந்தார். அதில் சினிமாவில் தண்ணி அடிக்காமல் இருக்கும் நடிகர்கள் ஒரு சில பேர்தான் என்றும் எனக்கு தெரிஞ்சு நடிகர் அஜித்தும் நடிகர் அபிஷேக் பச்சனும் தான் தண்ணி அடிக்கமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.