Cinema News
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு விஜயகாந்த் கொடுத்த முக்கியத்துவத்தை அஜித் கொடுக்கல.. ஒரே படமே வீணாப்போச்சு!..
சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்தது திரைத் துறையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கன்னா, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் அந்த படம் உருவாகி வருகிறது.
பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற சண்டைக்காட்சியின் போது 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து ஏழுமலை என்பவர் உயிரிழந்து விட்டார். ஸ்டண்ட் நடிகர்களுக்கு விஜயகாந்த் இருந்தபோது கொடுத்த முக்கியத்துவம் தற்போது கொடுக்கப்படவில்லை என்றும் விஜயகாந்த் இருக்கும்போது அவர்களுக்கான கவனிப்பு தனி என்றும் வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எங்க ஊர்ல இப்படி பண்ணுனா திட்டுவாங்க! கோலிவுட்டில் நடந்த சம்பவத்தால் நடுங்கிய மம்மூட்டி
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அன்லிமிடட் அசைவ சாப்பாடு போடுவார் விஜயகாந்த். ஸ்டண்ட் டைரக்டர் சொல்லும் அத்தனை வெரைட்டியும் வந்துவிடும். ஆனால், மற்ற யூனிட்களில் சண்டை பயிற்சியாளர்களுக்கு அத்தனைய கவனிப்பு இருக்காது என்று கூறியுள்ளார்.
சினிமாவில் புதிதாக நடிக்க வரும் நடிகர்களிடம் ஸ்டண்ட் காட்சிகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும் கூறுவார். ஆனால், அஜித் அதை சரியாக செய்வதில்லை எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எல்லாம் மும்பை செய்த மாயம்!.. ரகு தாத்தா ஆடியோ லாஞ்சுக்கு ஓப்பன் டிரெஸ்ஸில் வந்த கீர்த்தி சுரேஷ்!..
நந்தா பெரியசாமி இயக்கத்தில் மகா எனும் படம் உருவானது. முதல் நாளே ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அதில், அஜித் டூப் போடாமல் தானே பல்டி அடிக்கிறேன் என பெட்டில் விழாமல், தரையில் விழுந்து காலை உடைத்துக் கொண்டு மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்தார். அந்த படமே அப்படியே வீணாய் போய் விட்டது.
ஸ்டண்ட் கலைஞர்கள் பயிற்சி எடுத்து விட்டு செய்கின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பையோ, அவர்களுக்கு தேவையான ஊதியத்தையோ இங்கே யாரும் தருவதில்லை. 3 மாடியில் இருந்து ஒருத்தர் குதித்து நடித்தால் அவருக்கு சம்பளம் 5000 ரூபாய் தான். சும்மா முகத்தை காட்டும் நடிகர்களுக்கு 100 கோடி, 200 கோடி சம்பளம் தருகின்றனர். ஸ்டண்ட் கலைஞர்களுக்கான சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: பாடல் கேட்டு நொந்து போன பாலசந்தர்… அரை தூக்கத்தில் கண்ணதாசன்… அப்புறம் என்னாச்சுன்னு பாருங்க…