Categories: latest news

வெற்றித்துரைசாமிக்கும் அஜித்துக்கும் அப்படி என்ன நெருக்கம்? ஓடோடி வந்ததன் காரணம்

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமாவில் இந்தளவுக்கு வளர்ச்சியை அடைந்ததற்கு பின்னாடி அஜித் பட்ட கஷ்டங்கள் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் கேலி, கிண்டல்கள் ஏராளம். அதையெல்லாம் மனதில் ஏற்றிக் கொண்டு இன்று ஒட்டுமொத்த சினிமாவும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் அஜித்.

தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சைதை அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைச்சாமியின் மகன் வெற்றித்துரைச்சாமியின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த முதல் ஆளாக வந்து இறங்கியிருக்கிறார் அஜித்.

இதையும் படிங்க: மூணு பக்க அறிக்கை.. விளங்காத விஷால்! விஜய்க்காக ஏன் இவ்வளவு மெனக்கிடல்?

அதுவும் நீண்ட நேரமாக வெற்றித்துரைச்சாமியின் வீட்டிலேயே காத்துக் கொண்டிருக்கிறார். கூடவே அவரது மனைவி ஷாலினியும் வந்திருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகத்தையே அழுகுரலுக்கு ஆழ்த்தி சென்ற விஜயகாந்தின் மறைவிற்கு வராத அஜித் வெற்றி துரைச்சாமியின் மறைவிற்கு முதல் ஆளாக வந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் அஜித்தும் வெற்றித்துரைச்சாமியும் நெருங்கிய நண்பர்களாம். இதற்கு முன் அஜித்துக்கு என சொல்லிக் கொள்ளும் படி நண்பர்கள் கிடையாது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி ஒரு சிறந்த நண்பராம். அதுவும் வெற்றியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதில் அஜித்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டாம்.

இதையும் படிங்க: இப்படி ஒரு டைட்டில் வச்சதால எனக்கு நேர்ந்த கொடுமை! அர்ஜூன் சொன்ன அந்தப் படம் எதுனு தெரியுமா?

ஒரு 10 அல்லது 15 வருடத்திற்கு முன்பாகவே அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என வெற்றி திட்டமிட்டிருந்தாராம். ஆனால் வேறொரு காரணத்தில் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததாம். ஆனால் இந்த படம் சம்பந்தமாக அஜித்தும் வெற்றியும் பல நாள்கள் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வார்களாம். அதிலிருந்தே இருவருக்கும் நல்ல பழக்கமாம்.

அதுமட்டுமில்லாமல் அஜித்தின் பைக் ரேஸ் , கார் ரேஸில் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வெற்றி இருந்தாராம். இதன் காரணமாகவே அஜித்துக்கும் வெற்றிக்கும் ஒரு ஆழமான நட்பு இருந்து வந்திருக்கிறது. அந்த நட்பிற்கு மரியாதை கொடுக்கும் விதத்திலேயே அஜித் இன்று வெற்றிக்கு அஞ்சலி செலுத்த முதல் ஆளாக வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: உனக்கு ஒன்னுன்னா நான் இறங்கி வருவேன்டா!… வெற்றி துரைசாமி அஞ்சலி செலுத்த வந்த அஜித்..

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 minute ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

47 minutes ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

1 hour ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago