இப்பயாச்சும் நம்புங்கடா! 2 கோடி கொடுத்த அஜித் – வைரலாகும் புகைப்படம்! வேற வழி தெரியல ஆத்தா

Published on: December 17, 2023
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதராகவும் இருந்து வருகிறார். அவரை பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் அதை எல்லாம் பற்றி கவலை கொள்வதில்லை.

சில தினங்களாக அஜித் செய்த பல நல்ல உதவிகளை பற்றி சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றது. இதுவரை தான் செய்கின்ற உதவிகள் யாருக்கும் தெரிய கூடாது என்பதுதான் அஜித் போடும் முதல் கண்டீசன் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பாக்கியராஜை சும்மாவே விடக்கூடாது!… கொந்தளிக்கும் பிரபல இயக்குனர்… காரணம் தெரியுமா?..

எதற்கு அந்த பப்ளிசிட்டி வேண்டாம் என நினைக்கிறார் அஜித் என்று பல தரப்பினர் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் ஆட்கொண்ட மிங்ஜாம் புயல் காரணமாக பல ஏரியாவில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டன.அதற்காக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை பல பிரபலங்கள் நிவாரண உதவிகளை செய்து வந்தனர்.

ajith
ajith

அஜித் என்ன செய்தார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டன. ஆனால் அஜித் 2 கோடி கொடுத்ததாகவும் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் என்றும் தன் வீடுகளில் ஒரு 100 பேரை தங்க வைத்து அவர்களுக்கு தலா 1000 ரூபாய் கொடுத்ததாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதையும் படிங்க: பெருமூச்சு விட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள்!.. சூரரைப் போற்று ரைட்டரை தட்டித் தூக்கிய லோகேஷ் கனகராஜ்!

இதை பற்றி சினிமா பத்திரிக்கையாளர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் அவர் யாருக்கும் தெரியாமல் உதவி செய்பவர். அதனால் இது நடந்திருக்கக் கூடுமா என்ற சந்தேகமும் இருக்கின்றன. இந்த நிலையில் இன்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதில் அஜித் செய்த உதவிக்கு அவரை சுற்றி மக்கள் கட்டியணைத்து தங்கள் நன்றிகளை தெரிவிக்கிற மாதிரி அந்தப் புகைப்படத்தில் இருக்கின்றது. அது முழுக்க டீப் ஃபேக் புகைப்படம் என்று தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. ஆனால் அஜித் செய்த உதவிகள் குறித்து எந்த புகைப்படமும் வெளிவர போவதில்லை. அதனால் வேறு வழியில்லாமல் ரசிகர்கள் இந்த மாதிரி டீப் ஃபேக் புகைப்படத்தை உலா விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: 10 படத்துக்கு ஒரு படம் தான் தேறுது!.. முழு சம்பளத்தை கேட்ட காமெடி நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல்?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.