Connect with us
k.bhagyaraj

Cinema News

பாக்கியராஜை சும்மாவே விடக்கூடாது!… கொந்தளிக்கும் பிரபல இயக்குனர்… காரணம் தெரியுமா?..

Bhagyaraj: தமிழ் சினிமாவில் தனது திரைப்பட இயக்கத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் பாக்கியராஜ். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.  16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமானார்.

பின் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ் பின் தானே சொந்தமாய் படங்களை இயக்க ஆரம்பித்தார். இவர் சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய அறிமுகமானார். பின் பல திரைப்படங்களை கொடுத்த பாக்யராஜ் முன்னணி இயக்குனராகவும் வலம் வந்தார்.

இதையும் வாசிங்க:நடிகர் திலகத்தையே டென்ஷனாக்கிய வைகைப்புயல்… படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..

இவர் இயக்கிய முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் போன்ற திரைப்படங்கள் இவருகென தனி பெயரையும் சம்பாதித்து கொடுத்தது. மேலும் 80 களில் இவரது திரைப்படங்கள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டன. இவரது சின்ன வீடு, ராசுக்குட்டி போன்ற திரைப்படங்கள் மக்களை மிகவும் கவர்ந்தன.

இவரை போலவே பல வெள்ளி விழா திரைப்படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன். குறைந்த அளவு படங்களை இயக்கியிருந்தாலும் அப்படங்கள் அனைத்தையும் வெற்றிப்படாங்களாக கொடுத்தவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாக்கியராஜை பற்றி பேசியுள்ளார்.

இதையும் வாசிங்க:உருவ கேலிக்கு பயந்து தயங்கி நின்ன நடிகர்! அவரை அழைத்துக் கொண்டு போய் அஜித் என்ன செய்தார் தெரியுமா?

அதன்படி பாக்கியராஜ் எனும் இயக்குனர் தமிழ் சினிமாவை ஒருபடி மேலே கொண்டு சென்றவர். ஆனால் இக்கால இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அவரின் கதையை விரும்பவில்லை எனவும் அவர்கள் இந்த கால ஸ்டைலிலேயே படங்களை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழ் சினிமா என்றும் அவரை மறக்ககூடாது எனவும் மேலும் ஒவ்வொரு இயக்குனர்களும் தங்களது படத்தினை இயக்கும்போது பாக்யராஜ் மூத்த இயக்குனர் எனும் மரியாதையில் அவரையும் அழைத்து படத்திற்கான கதைகளை விவாதிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாக்கியராஜ் கதை பழைய கதை என நினைத்தால் அவருக்கு முன்னரே சினிமாவில் நடிக்க ஆரம்பித்த ரஜினி, கமல் இன்று வரை முன்னணி கதாநாயகர்களாக வரவில்லையா என அவர் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

இதையும் வாசிங்க:முதல் மரியாதை பட வாய்ப்பை மிஸ் பண்ணிய ரம்யா கிருஷ்ணன்!.. வட போச்சே!…

google news
Continue Reading

More in Cinema News

To Top