Categories: Cinema News latest news

அஜித் போட்ட விதை! ஓடோடி வந்து ஒரு கோடி கொடுத்த உதயநிதி – இதன் பின்னணி தெரியுமா?

Actor Ajith: அஜித் என்றால் விமர்சனம் என்றளவுக்கு தற்போது இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் அஜித். ஒருத்தர் அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருந்தால் தவறா? என கேட்கலாம். ஆனால் அது சாதாரண மனிதருக்கு பொருந்தும். ஒரு பொது வாழ்க்கைக்குள் வந்துவிட்டால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது? என்ன பேசுகிறார்கள்? என எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்.

பொதுவாழ்க்கை என்பது அரசியல் மட்டுமில்லை. சினிமாவையும் சொல்லலாம். ஆனால் அஜித்தை பொறுத்தவரைக்கும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் பரவாயில்லை. யார் எப்படி போனாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் இருப்பதாகவே வெளி உலகுக்கு காட்டிக் கொள்கிறார்.

இதையும் படிங்க: விஜயுடன் தொடர்ந்து நடித்த சதீஷ் அஜித் கூட நடிக்காமல் போன காரணம்? வந்த வாய்ப்பும் போச்சே

இந்த நிலையில் அஜித்தை பற்றி மற்றுமொரு செய்தி வைரலாகி வருகின்றது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்காக உதயநிதி ஒரு கோடி நிதியுதவி கொடுத்ததாக புகைப்படங்கள் வெளியானது. ஆனால் உண்மையிலேயே நடிகர் சங்கம் சார்பாக ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார்களாம்.

அதன் படி சினிமாவில் இருக்கும் முக்கிய டாப் நடிகர்களிடம் இருந்து தலா ஒரு கோடி தொகையை நீண்ட கால கடனாக பெற்று அதன் மூலம் கட்டிடத்தை கட்டிவிடலாம் என்ற வகையில் அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். அந்த திட்டத்தை உதய நிதி மூலமாக ஆரம்பித்திருக்கிறார்களாம். அதன் விளைவுதான் அவர் ஒரு கோடி கொடுத்தது.

இதையும் படிங்க: திடீரென சம்பளத்தை உயர்த்திய பிரபல பாடகி!.. எஸ்.ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்…

ஆனால் பத்திரிக்கையில் உதய நிதி ஒரு கோடி நன்கொடை என்றே போட்டிருந்தது. அது எந்த வகையில் கொடுத்தார் என்பது நடிகர் சங்கம் மூலமாக சொன்னால்தான் தெரியும். இன்னொரு பக்கம் நடிகர் சங்க கடனுக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் , மலேசியா என கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கடனை அடைத்தார் என அனைவருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில் விஜயகாந்திடம் ‘ஏன் நடிகர்களிடம் இருந்து பணம் பெற்று கடனை அடைக்கக் கூடாது? அதைவிட்டு இங்கு இருந்து பொழப்பிற்காக வெளி நாடு போனவர்களிடம் பணத்தை சுரண்டுவது முறையா? ’ என்ற ஐடியாவை சொன்னதே அஜித்தானாம். ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என விஜயகாந்தே வந்தால்தான் தெரியும். ஆனால் அஜித் இந்த ஐடியாவை கேப்டனிடம் கூறினார் என்று பரவலாக பேசப்படுகிறதாம்.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனுக்காக உச்ச நடிகரை அசிங்கப்படுத்திய நயன்தாரா… வச்சு செய்யும் நடிகர்… போச்சா?

Published by
Rohini