எனக்கு பிடிக்காத வார்த்தை சூட்டிங்..வைரலாகும் அஜித் புகைப்படம்! கடுப்பில் ரசிகர்கள்
Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அஜித் தேர்தல் முடிந்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு செல்வார் என்றால் விதவிதமான ஸ்டில்ஸ்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்படைய வைத்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 சதவீதம் எஞ்சியிருக்கும் நிலையில் லைக்காவின் பொருளாதார நெருக்கடி காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்தார்கள்.
ஒரு வழியாக வேட்டையன் படத்தை முடித்து அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புதான் என்று நினைத்துக் கொண்டிருக்க இடையில் தேர்தல் நடந்தது. தனது ஜனநாயக கடமையை சரியாக ஆற்றி வரும் அஜித் தேர்தல் முடிந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்வதாக அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து 4 நாள்கள் ஆகியும் இன்னும் அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றதாக தெரியவில்லை.
இதையும் படிங்க: அபார்ஷன் பண்ண சொன்ன கோபி… கடுப்பில் கத்திவிட்ட ராதிகா… தேவையா இதெல்லாம்?
கேரளாவில் பைக் டிரிப் சென்றிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது. மேலும் நேற்று ஏதோ ஒரு கோயிலில் பூஜையில் அஜித் கலந்து கொண்ட மாதிரியான அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் இன்றும் அவர் சம்பந்தப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் அவருக்கே மிகவும் பிடித்த தொழிலான சமையல். ஒரு ஹோட்டலில் அஜித்தே இருந்து சமைத்துக் கொடுக்கும் மாதிரியான புகைப்படமும் வெளியாகியிருக்கிறது. மேலும் தன் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மாதிரியான புகைப்படமும் வெளியாகியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அஜித்தின் புகைப்படம் கிடைத்தால் போதும் என்று இருந்த ரசிகர்களுக்கு இப்போது அஜித் போட்டோவே எரிச்சலடைய வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: நான் டாப் ஸ்டார் இல்ல… பிரசாந்தே இப்படி இப்படி சொல்ற அளவுக்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்…
விடாமுயற்சி முடித்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் எப்போது நடிக்க போகிறார் அஜித் என்ற ஆர்வம்தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதில் இப்படி அடுத்தடுத்து அஜித் பைக் பயணம், ஹோட்டல் என புகைப்படங்கள் வெளியாவது ரசிகர்களை கடுப்படைய வைத்திருக்கிறது.