தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது கார் ரேசில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் கூட தன் மகளுடன் கேரளாவில் இருக்கும் பகவதி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்து வந்தார். குடும்பம் குழந்தை நடிப்பு தன்னுடைய பேஷன் என அனைத்திலும் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கிறார். ஒரு நடிகராக இருந்து எப்படி குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை அஜித்திடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில் தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் சந்தோஷமாக வைத்திருக்கிறார். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார் அஜித். அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். அந்தப் படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என ஆதிக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதனால் அந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ஆதிக் அஜித் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய விருந்து படைத்தது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. மீண்டும் அதே கூட்டணி என்னும்போது இன்னும் அந்த படத்திற்கு ஹைப் அதிகமாகி இருக்கிறது.
இந்த நிலையில் அஜித்தை பற்றியும் ரஷ்மான் பற்றியும் கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் ஒரு சில விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். இருவருமே ஒரே கேரக்டர் தான் என்று கூறி இருக்கிறார் ரவிக்குமார். இதோ அவர் பகிர்ந்த அந்த செய்தி: அஜித்தும் ரஹ்மானும் ஒரு வகையில் ஒரே கேரக்டர் தான். ஒரே மைண்ட் செட்டும் கொண்டவர்கள். நம்ம ஒரு விஷயத்தை கமிட் செய்தோமா அதை முடிக்க வேண்டும்.
ஒருத்தருக்கு நாம வாக்கு கொடுத்தோமா அதை செய்ய வேண்டும். எது பிடிக்காதோ அதை செய்ய மாட்டோம். நமக்கு இதுதான் சரின்னு படுதா அதை செய்ய வேண்டும். இதுதான் அஜித்தும் ரஹ்மானும் பின்பற்றுகிறார்கள். நடிகர்களில் அஜித் என்றால் மியூசிக் டைரக்டரில் ரஹ்மான். இருவரும் ஒரே கேரக்டர் தான்.
அதோடு இரண்டு பேருமே யாரிடமும் கடுமையாக பேசுவதோ கோபப்பட்டு பேசுவதோ அது கிடையவே கிடையாது. ரொம்ப அமைதியாக இருப்பார்கள் என கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் அஜித்தையும் ரஹ்மானையும் பற்றி அவருடைய அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.
