சத்தமே இல்லாமல் ஒதுங்கிய அஜித் ஃபேன்ஸ்! ஒரே நாளில் லியோ படத்தின் சாதனை… தெறிக்க..!

Leo Trailer: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் ரிலீஸ் எதிர்பார்ப்பு உச்சத்தினை தொட்டு இருக்கிறது. அந்த எதிர்ப்பை அதிகரித்தது நேற்று வெளியான லியோவின் ட்ரைலர். கிட்டத்தட்ட பட ரிலீஸ் மாதிரி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர்.
எப்பையுமே விஜய் என்றால் ரெக்கார்ட் கிங் என்பது தான் கோலிவுட் கிங். அப்படி அவரின் படத்தின் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் யூட்யூப்பில் ரிலீஸ் ஆகும் போது மற்ற நடிகர்களின் ஹிட் லிஸ்ட்டினை அசால்ட்டாக தட்டிவிட்டு மேலே சென்று விடும்.
இதையும் படிங்க: அடேங்கப்பா!.. என்ன ஷேப்டா.. இது ஷிவானியா இல்லை மகாபலிபுரத்துல செதுக்கி வச்ச சிலையா?..
இந்த முறையும் அதே சாதனைக்காக விஜய் ரசிகர்கள் தீவிரமாக லியோ ட்ரைலரை பார்த்து வந்தனர். அதன் அடிப்படையில் தற்போதைய நேரப்படி 30.5 மில்லியன் வியூஸை தாண்டி இருக்கிறது லியோ ட்ரைலர். லைக்ஸ் 2.5 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் லேட்டஸ்ட் படமான துணிவு தமிழ் ட்ரைலரை 24 மணிநேரத்துக்குள் 30.3 மில்லியன் பார்வைகள் மட்டுமே பெற்றது. இதை 20 மணிநேரத்துக்குள் லியோ தட்டி தூக்கி இருக்கிறது. மேலும் யூட்யூப்பில் பிகில் படத்துக்கு ஒரு மில்லியன் லைக்ஸ் 60 நிமிடத்துக்குள் வந்தது. ஆனால் லியோ படத்துக்கு 1மில்லியன் லைக்ஸ் 20 நிமிசத்துக்குள்ளே வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மரண பயத்தை காட்டிட்டான் பரமா! மீசை எடுக்கிறேனு சொன்னது தப்புதான் – டிரெய்லருக்கே இப்படியா?
லியோ படத்தால் ரொம்பவே அப்செட்டில் இருந்த விஜய் ரசிகர்கள் இந்த சாதனை ரெக்கார்ட்களால் செம குஷியில் இருக்கிறார்கள். இதனால் படத்தின் ரிலீஸ் மீது மேலும் ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. ரெகார்ட்டினை கிரியேட் செய்து இருந்தாலும் லியோ படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற சில வசனங்களால் சில சர்ச்சைகளும் கிளம்பி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.